tamilnadu

இன்னுயிர் காப்போம் திட்டம் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள்

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில்  கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் சிகிச்சை அளிக்கப்படும். 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில்  பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், பின்வரும் மூன்று வழி காட்டுதல்களின்படி சிகிச்சைகள் வழங்கப்படும். முதல் - அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடரலாம்.  

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை  காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால், நோயா ளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையை கட்டணமில்லாமல் தொடர லாம். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்து வமனைக்கு செல்ல தயாராக இல்லை என்றாலொ (அல்லது) தனியார் காப்பீட்டிலொ (அல்லது) பணம்  செலுத்தியோ சிகிச்சையை பெற விரும்பினால், நோயாளியை நிலைப்படுத்தி அதே  மருத்துவமனையிலொ அல்லது அவர் தேர்ந்தெடுக் கும் பிற மருத்துவமனையிலொ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனிநபரே செலுத்தி சிகிச்சையைத் தொடரலாம்.  இன்னுயிர் காப்போம்- நம்மைக்காக்கும் 48  திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும்  அறியும் வகையில் வலைதளங்களில் வெளியிடப் பட்டுள்ளன. மேலும் இது குறித்து விவரங்களை மருத்துவமனை, அவசரகால ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அறியும் வகையில் மாவட்ட  நிர்வாகத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டு உள்ளது. இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்  104-ஐ தொடர்பு கொள்ளலாம்.

;