மதுரை:
எல்ஐசி உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளை விற்பது அரசியல் சாசனத்தை மீறுவதாகும் எனதென்மண்டல காப்பீட்டு ஊழியர் சங்கபொதுச் செயலாளர் செந்தில்குமார் கூறினார்.
மதுரையில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற காப்பீட்டு கழகஊழியர் சங்கத்தின் மதுரை கோட்ட64 ஆவது மாநாட்டில் பங்கேற்றஅவர் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:எல்ஐசி 2020 - 21 ஆம் நிதியாண்டில்சுமார் மூன்றரை லட்சம் கோடி பிரீமியம்களை மக்களிடமிருந்து பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில்75 சதவீதம் முதல் 85 சதவீதம் வரையிலான பணம் அரசு துறைகளில் முதலீடு செய்யப்பட உள்ளது. மத்திய அரசு கேட்டுக் கொண்டால் நூறு சதவீத பணத்தையும் அரசு நிறுவனங்களில் முதலீடு செய்ய எல்ஐசி தயாராகஉள்ளது.எல்ஐசியில் காப்பீடு செய்வது மக்களுக்கு பாதுகாப்பானது மட்டுமல்ல;தேசத்தின் வளர்ச்சிக்கும் அவர்கள் உதவி செய்கின்றனர் என்பது நிதர்சன
மான உண்மை. எல்ஐசி நிறுவனத்தைமத்திய அரசு தனியார்மயமாக்கும், பங்குகளை விற்கும் முயற்சியை கைவிட வேண்டும். அதே நேரத்தில் எல்ஐசிநிர்வாகத்திற்கு தன்னாட்சி அதிகாரம்வழங்க வேண்டும் .அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு அங்கீகாரமும் கூட்டு பெற உரிமையும் வழங்க வேண்டும்.
எல்ஐசியின் லாபத்தில் 95சதவீதம்பாலிசிதாரர்களுக்கும் 5 சதவீதம் எல்ஐசிக்கும் அளிக்கப்படுகிறது. ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 90 சதவீதத்தை பாலிசிதாரர்களுக்கும் 10 சதவீதத்தை அந்த நிறுவனமும் எடுத்துக்கொள்கிறது. தனியார் நிறுவனங்கள்தங்களது லாபத்தில் அரசின் வளர்ச்சிப்பணிகளுக்கு எந்தவிதமான பங்களிப்பையும் செலுத்துவதில்லை. ஆனால் எல்ஐசி மட்டுமே தேசத்தின்வளர்ச்சி, மக்களின் நலன் ஆகியவற்றுக்காக அரசு துறைகளில் முதலீடு செய்கிறது.1949ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் பொதுமக்களிடம் இருந்து பணத்தை ஈட்டும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் நிறுவனங்களாக இருக்க வேண்டும். அதுதான் தேசத்தின் வளர்ச்சிக்கும் மக்கள் பணத்திற்கும் பாதுகாப்புக்கும் நல் லது. எனவே இந்நிறுவனங்கள் அரசுத்துறைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என கூறினார் .ஆனால்இன்றைக்கு ஆட்சி பொறுப்பில் உள்ள மத்திய அரசு அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை மீறி பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சித்து வருகிறது. எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்த்தால் அது மக்கள் விரோத நடவடிக்கையாக கருதப்படும்.
காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் எல்ஐசியை பாதுகாப்பது மட்டும் அல்லாமல் நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்று தேசபக்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது.குறிப்பாக இன்சூரன்ஸ் பீரிமியம் மற்றும் பிற சேவை மீதான ஜிஎஸ்டி வரியினை ரத்து செய்ய வேண்டும். எல்ஐசியின் வளர்ச்சியை எந்த விதத்தில் சிதைக்க முயன்றாலும் அதற்கு எதிராக காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் தொடர்ந்து போராடும். தேவைப்பட்டால் நடுதழுவிய வேலை நிறுத்ததிற்கும் தயராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.