tamilnadu

img

பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் நிஜ ஹீரோ செங்கொடி இயக்கம்! கே.எஸ்.கே. நினைவு நாள் கூட்டத்தில் இ.முத்துக்குமார் பேச்சு

பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் நிஜ ஹீரோ செங்கொடி இயக்கம்! கே.எஸ்.கே. நினைவு நாள் கூட்டத்தில் இ.முத்துக்குமார் பேச்சு

திருப்பூர், அக்.8- பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் நிஜ ஹீரோவாக செங் கொடி இயக்கம் திகழ்கிறது என்று தோழர் கே.எஸ்.கருப்பசாமியின் 16 ஆம் ஆண்டு நினைவஞ்சலிப் பொதுக் கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலா ளர் இ.முத்துக்குமார் கூறினார். தொழிலாளர்களின் தோழர் கே.எஸ்.கே.வின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் திலகர்நகர் நால் ரோடு பகுதியில் செவ்வாயன்று நடை பெற்றது. அப்போது முத்துக்குமார் பேசு கையில் கூறியதாவது,  விலைவாசி உயர்வுதான் மக்களின் மிகப்பெரிய எதி ரியாக உள்ளது. இது பற்றி எந்த அரசி யல் கட்சியாவது பேசியது உண்டா?  திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், கம்யூனிஸ்ட்கள் மக்கள் பிரச்சனை குறித்து மௌனமாக இருக்கிறார்கள் என்று தொடர்ந்து அவதூறு பரப்பப்ப டுகிறது. 50 நாட்களுக்கும் மேலாக அரசு  போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி  வரும் போராட்டத்திற்கு தலைமை தாங்குவது செங்கொடி இயக்கம்தான். உலகின் மிகப்பெரிய கார்பரேட் நிறு வங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனத் தில் வேலை செய்யும் தொழிலாளர்க ளுக்காக போராடி நீதி பெற்று கொடுத் தது செங்கொடிதான். சிலர் கம்யூ னிஸ்ட்களுக்கு சாதிய புரிதல் இல்லை  என்று கூறுகின்றனர். தோழர் கே.எஸ்.கே.வின் முதல் போராட்டமே, தான்  பணிபுரிந்த நிறுவனத்தில் கடைப்பிடிக் கப்பட்ட இரட்டை குவளை முறைக்கு எதிராகத்தான் இருந்தது. இப்படி எண் ணற்ற தலைவர்களை கட்சி உருவாக்கி யுள்ளது. சமூகநீதி என்பது பட்டிமன்றத்தில் பேசிச் செல்லும் பிரச்சனை அல்ல. தேர் தல்களில் சாதி பார்த்து வேட்பாளர்  நிறுத்துவது, ஆதிக்க சாதிகளுக்கு ஆத ரவாக செயல்படுவது என இங்குள்ள கட்சிகள் மாறுவேசம் போடுகிறது. களத் தில் அனைத்து வகையான தீண்டாமை  கொடுமைகளுக்கும் எதிராக போராடு வது, பட்டியலின, பழங்குடியின மக்க ளுக்கு நீதி பெற்று தருவது மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிதான். சமூகநீதி என் பது செவிலியர்கள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள்  என அனைத்துத் தரப்பினரின் பிரச்ச னைக்கும் தீர்வு காண்பதுதான். இந்தியாவுக்கு ஒரு மாறுபட்ட புதிய  அரசியல் தேவை. அதற்காகத்தான் கம்யூனிஸ்ட்டுகள் போராடி வருகின்ற னர் என்று இ.முத்துக்குமார் கூறினார்.   இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் திலகர் நகர் கிளை உறுப்பினர்  பி.நவபாலன் தலைமை வகித்தார். திலகர் நகர் பி கிளைச் செயலாளர் சே. ராம்கி வரவேற்று பேசினார். நகரக்குழு உறுப்பினர் அ.உமாநாத், நகரக்குழுச் செயலாளர் ச.நந்தகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் ஆகியோர் தோழர் கே.எஸ்.கே குறித்து பேசினர். முன்னதாக அவிநாசி அதிர்வுகள் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி, கீழடி குறித்த நாடகம் மற்றும் திருப்பூர் கலைக்குழுவின் விடுதலைக்கும்மி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் வேலம்பாளையம் நகரத்தில்  மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சேர்க்கப்பட்ட  80 தீக்கதிர் சந்தா தொகையை முதல் கட்டமாக சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமாரிடம் நகரக்குழு செய லாளர் ச.நந்தகோபால் வழங்கினார். இதில், மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி மாவட்டக்குழு உறுப்பினர்  ர.கவிதா உட்பட திரளானோர் பங்கேற்ற னர். முடிவில் தண்ணீர்ப்பந்தல் கே. செளந்தர்ராஜன் நன்றி கூறினார்.