tamilnadu

img

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் மர்மச்சாவு

இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருநெல்வேலி, டிச.15 - ராதாபுரம் பகுதியில் கல் குவாரி களை மூட வேண்டும். இறந்தவர்க ளின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என சிபிஎம் வலியு றுத்தியுள்ளது. நெல்லை  மாவட்டம் இராதா புரம் தாலுகா இருக்கன்துரை ஊரா ட்சிக்கு உட்பட்ட சூட்சிகுளம் ஆதி திராவிடர் கிராமத்தில் 75குடும்பங் கள் உள்ளன. அந்த கிராமத்தில் வசித்துவரும் மணி (52). கொத்தனார் வேலைசெய்து வருகிறார். இவர் மனைவி நோய்வாய்பட்டுள்ளார். இவருக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண்குழந்தை உண்டு. மூத்த  மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது மகள் சித்த மருத்து வம் படித்து உள்ளார். இவருடைய மகன் இன்ஜினியரிங் படித்து உள்ளார். தினந்தோறும் கொத்தனார் கூலி வேலை செய்துதான் குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஆறுமா தம் முன்பு சூட்சிகுளம் ஊரின் அருகில்  புதிய கல்குவாரி பணிகள் ஆரம்பிக் கப்பட்டது.அந்த கல்குவாரி வந்தால்  எங்கள் ஊரில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் மற்றும் கல்குவாரி போட அதிக அழுத்தம் கொண்ட வெடி போடுவதால்  வீடு களின் சுவர்களில் பிளவுகள் ஏற்படும்  என ஊர் மக்கள் ஒன்றிணைந்து கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பலமுறை போராட்டம் நடத்தினர். அதனால் இவர் மீது கல்குவாரி உரிமை யாளர்கள் கடும்  கோபத்தில் இருக்கும் சூழ்நிலை உருவாகியது. மேலும் இவர் மகன்  கூடன்குளம் அணுமின் நிலையத்தில்  காண்ட்ராக்டர் வேலை  செய்வதற் காக கடந்த 13/12/2021அன்று வள்ளி யூர் டிவி.எஸ் கம்பெனி யில் புதிய பைக் வாங்க சென்றுள்ளனர்.  பைக் எடுத்த பின்பு, சுபாஷ் நீ போ.  நான் பின்னாடி வருகிறேன் என்று மணி  கூறியுள்ளார்.  சுபாஷ் வீட்டுக்கு புதிய  பைக்கில் மெதுவாக  வந்தார். அதற்கு  பின்னாடி எனது தந்தை பைக்கில் மெதுவாக வருகிறேன் என்று தந்தை  சொல்லி விட்டு வந்து கொண்டு இருக்கும் போது சுமார் 5.30மணியள வில் காவல் கிணறு பைபாஸ்ரோட் டில் மங்கமா சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அந்த ரோட்டில் சென்ற நபர் சுபாஷி டம்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் அப்பா ரோட்டில் அருகில்இறந்து கிடக்கிறார் என்று தகவல் கொடுத்தார்.

சுபாஷ் பைக்கில் அரைமணி நேரம் கழித்து திரும்பி  வந்து பார்க்கும் பொழுது விபத்தில் சிக்கி  இறந்தார் என்று  காவல் துறைஅதிகாரிகள் தெரி வித்துள்ளனர். ஆனால் சுபாஷோ, எனது அப்பா  இறப்பு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி அதன் பின் விபத்து நடந்த மாதிரி செயல்களில் ஈடுபட்டனர் என்று கருதுகிறேன் என்கிறார். அதன் பின் 14/12/2021அன்று காலை 10 மணி யளவில், வள்ளியூர் டி.எஸ்.பி மற்றும்  பணகுடி காவல் ஆய்வாளர், சேரன்மகாதேவி கோட்டாட்சியர்  தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் கற்பகம்,  தாலுகா செயலாளர் கல்யாணிகுமார்,  ரஜினி கதிரவன், இருக்கன்துரை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மணி யின் மகன் சுபாஷ், மணி மனைவி யின் தம்பி முத்துக்குமார். நயினார்,  குமார், கல்யாணி மற்றும் அவர்களின்  உறவினர்கள், குடும்பத்தார் கலந்து கொண்டனர்.

கோட்டாட்சியர் உறுதி

பேச்சுவார்தையில், இறந்த மணி யின் குடும்பத்துக்கு  தமிழக முதல மைச்சர் நிதியுதவி கீழ் இழப்பீடு நிவாரணம் நிதியாக இருபத்தி ஐந்து  இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் மேலும் அவருடைய மகன் கல்வி அடிப்படையில் அரசு வேலை வழங்க  வேண்டும். சேரன்மகாதேவி கோட் டாட்சியர் தலைமையில் மற்றும் காவல் துறை மூலமாக தனிகுழு அமைத்து  இந்த மர்மமான  விபத்து  குறித்து விசாரணை நடத்த வேண்டும்.  விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும்  அல்லது  மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டால்  கொலையாளிகள் உடனடியாக  கைது செய்ய வேண்டும் .இந்த கிராமத்தில் உள்ள  கல்குவாரியை நிரந்தர மாக மூட  வேண்டும். கிராமத்தில் சில இடங்க ளில் உள்ள கேமராவை மாற்றி விட  வேண்டும். மேலும்அரசு விதிகள் படி செக்போஸ்ட் அமைத்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.  மேற்கண்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து மிக விரைவில் நிவர்த்தி செய்து  தருகிறேன்,  பொது மக்கள்  ஒப்புதல் அளித்த பின்பு உடற்கூராய்வு செய்யப்படும் என  கோட்டாட்சியரால் உறுதியளிக்கப் பட்டது. இதையடுத்து செவ்வாய் இரவே உடற்கூராய்வு செய்யப்பட்ட சடலம் சுபாஷ் மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 

;