tamilnadu

img

நிலக்கரித் தட்டுப்பாட்டை போக்குவதில் கையாலாகாத மோடி அரசு

தூத்துக்குடி, அக். 13- கடுமையான நிலக்கரி தட்டுப் பாட்டால் பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தியும், விநியோகமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இப்பிரச்சனையை கையால்வதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டி னார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு தலங்களை புதனன்று பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி  அனல்மின் நிலை யத்தைப் பொருத்தவரை மொத்தம் 55 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளன. நாள் ஒன்றுக்கு 18ஆயிரம் டன் செலவாகும் நிலையில் 5 நாட்களுக்கு மட்டுமே தேவையான நிலக்கரி உள்ளது. மேற்குவங்கம், ஒடிசா மாநிலம் வழங்க வேண்டிய நிலக்கரியை ஒன்றிய அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும்.

கூடன்குளத்தில் அணுமின் தொகுப்பு அமைவதை சிபிஎம் எதிர்க்கிறது. கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் தற்போது உள்ளது. மூன்று, நான்கு என அணு  உலையை விரிவாக்கம் செய்வதை அப்போதே சிபிஎம் எதிர்த்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக் கழிவுகளை அங்கேயே வைத்திருக்கப் போவதாக கூறப்படு கிறது. இது தூத்துக்குடி, திருநெல் வேலி மாவட்டங்கள் மட்டும் அல்ல  தென் தமிழகத்திற்கே அச்சுறுத்தலாக அமையும். கூடங்குளத்தில் அணு கழிவுகளை குவிக்கும் முடிவை கைவிட வேண்டும்.

சம்பளம் என்னாயிற்று?

100 நாள் வேலை திட்டத்தில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு 5 வாரங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. குறிப்பாக பட்டியல் சாதியை  சேர்ந்தவர்களுக்கு 6 வாரம் முதல் 7 வாரம் வரை சம்பளம் வழங்க வில்லை. 100 நாள் வேலையில் பணி யாற்றும் தொழிலாளர்களை சாதி ரீதியாக பிரிப்பது கண்டிக்கத் தக்கது. ஒன்றிய அரசே தீண்டாமையை ஊக்குவிக்கிறது. சாதி பாகுபாடு இல்லாமல் விவசாய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கு கடந்த ஆண்டு 130 ஆயிரம் கோடி ஒதுக்கிய மோடி அரசு தற்போது 75ஆயிரம் கோடியே ஒதுக்கியுள்ளது. 14.5 கோடி கிராமப் புற தொழிலாளர்கள் இதன் மூலம் பயன் அடைகிறார்கள். ஒன்றிய அரசு இந்த திட்டத்திற்கான நிதியை வெட்டக்கூடாது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 100 நாள் வேலை திட்டமே தேவைஇல்லை என்கிறார். இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் அடைந்த பயன்கள் குறித்து முன்னாள் ஐஏஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி நூல் ஒன்றை எழுதி உள்ளார். சீமான் அதைப் படித்து கொள்ளலாம். 

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமை யிலான அணி அமோக வெற்றி பெற்றுள் ளது. இதற்கு காரணம் அரசு அளித்துள்ள சலுகைகள் கிராமப்புறங்களை சென்ற டைந்துள்ளது, மக்கள் பிரச்சனைகளை இந்த  அரசு கேட்டு அறிந்து செயல்படுகிறது. அதிமுக மீதுள்ள அதிருப்தி இன்னும் மக்களிடத்தில் உள்ளது என்பதை உள்ளாட்சி தேர்தல்முடிவுகள் காட்டு கின்றன. வாக்களித்த மக்களுக்கு சிபிஎம் நன்றி தெரிவித்து கொள்கிறது. ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டறி யப்பட்ட 6000 பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளன. அதனை திரும்பப் பெற்று ஆதிச்ச நல்லூரில் அமைய உள்ள திறந்த வெளி  அருங்காட்சியத்தில் வைக்க வேண்டும், தொல்லியல் துறை சார்ந்த படிப்பு களை ஊக்குவிக்க வேண்டும், கல்லூரி  பாடத்திட்டத்தில் அனைத்து பாடப்பிரிவு களிலும் தொல்லியல் படிப்பை ஒரு பாட மாக்க வேண்டும், தொல்லியல் படித்த மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். 

கொற்கையின் பிரமிப்பு

கொற்கையில் 3200 ஆண்டுகளுக்கு முன் நெல் விவசாயம் நடைபெற்றுள்ளது என்பதை அங்கு கண்டறியப்பட்ட பொருளில்  இருந்து தெரிய வந்துள்ளது. 3200 ஆண்டு களுக்கு முந்தைய நெல்மணிகள் இன்றும்  அப்படியே உள்ளது, இது பிரம்மிப்பூட்டு வதாய் உள்ளது, நெல்மணிகளின் காலம் 3200 ஆண்டுகள் என்றால் அதற்கு 100  ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் அங்கு  வாழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகி யுள்ளது, இதன் மூலம் தமிழ் மக்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் மிகத் தொன்மையானது என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக புதன்கிழமை காலை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கை, சிவகளை, ஆதிச்ச நல்லூர் அகழாய்வு தலங்களையும் அங்கு நடைபெற்ற பணிகள் குறித்தும், கன்டறியப்பட்டுள்ள பொருட்கள் குறித்தும் கொற்கை அகழாய்வு  தள பொறுப்பாளர் ஆசைதம்பி, ஆதிச்ச நல்லூர் பொறுப்பாளர் ராஜவேல் ஆகியோரி டம் கே.பாலகிருஷ்ணன் கேட்டறிந்தார். அவருடன் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.பி. ஆறுமுகம், இரா.பேச்சிமுத்து, திருவை குண்டம் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், மாணவர் சங்க நிர்வாகிகள் ஸ்ரீநாத், கிஷோர் ஆகியோர் வந்திருந்தனர்.

 


 

;