எதிர்கால இந்தியாவுக்கு இடதுசாரிகளே நம்பிக்கை!
சென்னை, அக். 4 - இடதுசாரிகளுக்குத்தான் இந்தியாவில் பரந்து விரிந்து வளர வாய்ப்பு உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்க ராஜன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் எழுதி, பாரதி புத்த காலயம் பதிப்பித்துள்ள ‘முதலாளித்துவத்தால் மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (அக்.3) சென் னையில் நடைபெற்றது. மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் நூலை வெளியிட இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். மிருதுளா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கு. தமிழ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று நிகழ்வு களை எடுத்துரைத்துப் பேசிய டி.கே. ரங்கராஜன், “பழைய முறையிலான நிலப்பிரபுத்துவமும், முத லாளித்துவமும் இன்று இல்லை. அது நவீனப் பட்டிருக்கிறது. 5-ஆம் தலைமுறை நவீன தொழில் புரட்சி காலத்தில் இருக்கிறோம். நவீன தாராள மயமாக்கல் காலத்தில் சுரண்டலும் நவீனமயமாகி உள்ளது. இதை புரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது” என்றார். “இனி நடத்தப்போகும் வர்க்கப் போராட்டம் கடந்த காலத்தை போன்று இருக்காது. அதைவிட தீவிரமாக போராட்டங்களை நிகழ்காலமும், எதிர் காலமும் சந்திக்க உள்ளது. இடதுசாரிகள் சுருங்கி யது போன்று தோற்றம் இருக்கிறது. ஆனால் நமக்குத்தான் விரிவடைய வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் கூறினார். “வங்கி, பொதுத்துறை ஊழியர்கள் நடுத்தர வர்க்கம் அல்ல. கூடுதல் ஊதியம் பெரும் உழைக்கும் வர்க்கம் தான். இவர்கள் வேறுவிதமாக, நவீனமாக சுரண்டப்படுகிறார்கள். மத்திய தர வர்க்கம் என்றால் குறைந்தபட்சம் ஒரு சிறுதொழில் (ஸ்மால் இன்டஸ்ட்ரி) நடத்துபவராக இருக்க வேண்டும்” என்றும் டி.கே. ரங்கராஜன் கூறினார். “இந்துத்துவா, சமூகத்தில் அனைத்துப் பகுதி யிலும் ஊடுருவி உள்ளது. கோவில், சர்ச் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வோர் அதிகரித்து வருகின்றனர். மதம் மக்களிடம் ஆழமாக ஊடுருவிக் கொண்டுள்ளது. இதனால், மக்கள் உடனடியாக ஆர்எஸ்எஸ் பக்கம் சென்றுவிடுவார்கள் என்று பொருள் இல்லை. ஆனால், இந்த நடைமுறை வலதுசாரி போக்கிற்கு உதவும்; அமெரிக்கா, ஐரோப் பாவை தொடர்ந்து இந்தியாவிலும் இந்தப்போக்கு வந்துள்ளது. இந்துத்துவாவை எதிர்கொள்ள அதை ஆழமாக உணர வேண்டும்” என்று டி.கே. ரங்கராஜன் தெரிவித்தார். க. சுவாமிநாதன் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. சுவாமி நாதன் பேசுகையில், “கம்யூனிச இயக்க வரலாறு, கட்சியின் வரலாறாக அல்லாமல், விடுதலைப் போராட்டத்தின், தேசத்தின் வரலாறாக உள்ளது” என்றார். கட்சி அடுக்குமுறையில் இருந்தபோது முதல் பொதுத்தேர்தலில் ஒரே வேட்பாளர் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 3 சட்டமன்றத் தொகுதி களில் போட்டியிட்டதையும், அதில், ஒரு எம்.பி., 2 எம்எல்ஏ தொகுதிகளில் வெற்றி பெற்றதையும் சுட்டிக்காட்டினார். கம்யூனிஸ்ட்கள் பெற்ற வாக்கு கள் உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான அம்சங் களை எடுத்துரைத்தார். பி. சம்பத் நூலாசிரியர் பி. சம்பத் பேசுகையில், “மக்கள் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ கட்சிகளிடம் மாற்றுத் திட்டம் இல்லை. கம்யூனிஸ்ட்டுகளிடம் மட்டுமே மாற்றுத்திட்டம் உள்ளது. கம்யூனிஸ்ட்டு களின் வரலாற்றை, தியாகங்களை, மாற்றுத் திட்டங் களை மக்களிடம் கொண்டு செல்ல உதவிடும் வகையில் இந்த நூல் இருக்கும். கம்யூனிஸ்ட் இயக்கம் சந்திக்கும் பின்னடைவு கள் தற்காலிகமானவை. கம்யூனிஸ்டுகள் இல்லாமல் இந்தியாவிற்கு எதிர்காலம் கிடையாது. இருட்டடிப்புகளை மீறித்தான் வளர வேண்டி உள்ளது. மகத்தான வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்” என்றார். நிகழ்விற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஆர். பத்ரி தலைமை தாங்கினார். பாரதி புத்த காலயம் பதிப்பாளர் க. நாகராஜன் வரவேற்றார். நூலை அறிமுகம் செய்து எஸ். மிருதுளா, கு. தமிழ் ஆகியோர் பேசினர். ஜி. செல்வா (சிபிஎம்), கே. ஆறுமுகநயினார் (போக்குவரத்து), எஸ். செல்லப்பா (பிஎஸ்என்எல்இயு), தி. ஜெய்சங்கர் (மின்ஊழியர்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பாரதி புத்தகாலய ஊழியர் ரமேஷ் நன்றி கூறினார்.
