tamilnadu

img

புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் தாக்கம்

புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் தாக்கம்

தென்னிந்தியாவின் மான் செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாவட்டம், தொழில்  துறையில் மட்டுமல்லாமல், கல்வி  மற்றும் நகை உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல், மருத் துவம் எனப் பல்வேறு துறை சார்ந்த  கல்லூரிகளைக் கொண்ட கோவையில், கோவை மட்டு மின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில வருகின்றனர். இவர்களில் பலர் தங்கள் கல்விச் செலவுகளைச் சமாளிக்க பகுதிநேர வேலைகளி லும் ஈடுபட்டு வந்தனர். இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசு 2022 செப்டம்பரில் “புதுமைப்  பெண்” திட்டத்தைக் கொண்டுவந் தது. இத்திட்டத்தின் கீழ், அரசுப்  பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு  வரை படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகி றது. இத்திட்டத்தால் தமிழகம் முழு வதும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற் பட்ட மாணவிகள் பயனடைந்துள் ளனர். கோவையில் மட்டும் 312  கல்லூரிகளில் மாணவிகள் இத் திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்ற னர். 2022-23 கல்வியாண்டில் 9,521  மாணவிகளும், 2023-24 கல்வி யாண்டில் 13,642 மாணவிகளும், 2024-25 கல்வியாண்டில் 21,252 மாணவிகளும் என ஒவ்வொரு ஆண்டும் புதுமைப் பெண் திட்டத் தின் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேபோல, கடந்த ஆண்டு  அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு வரும் மாணவர்களுக் காக “தமிழ் புதல்வன்” திட்டம் அறி முகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் ஏழை எளிய மாணவர்களின் கல் விக்கு பேருதவியாக உள்ளது.  கோவையில் மட்டும் 284 கல்லூரி களில் பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கல்வி  உதவித்தொகையாக மாதந் தோறும் ரூ.1,000 வழங்கப்படு கிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே சுமார் 26,073 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. தமி ழகத்திலேயே தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அதிக பயனாளி களைக் கொண்ட மாவட்டமாக கோவை உருவெடுத்துள்ளது. இத்திட்டங்களால் பயன டைந்த மாணவ, மாணவிகள் தங் கள் அனுபவங்களைப் பகிர்ந்து  கொண்டனர். தேனி மாவட்டத் தைச் சேர்ந்த ஒரு மாணவி, கோவை அரசு கலைக் கல்லூரி யில் மூன்றாம் ஆண்டு படித்து வரு கிறார். புதுமைப் பெண் திட்டம் தொடங்கியதிலிருந்து மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வருவ தாகவும், இது நோட்டுப் புத்தகம்,  பி.டி.எஃப். ஜெராக்ஸ், ரெக் கார்டு நோட்டுகள் வாங்க மிகவும்  உதவியாக இருப்பதாகவும் தெரி வித்தார். வெளி மாவட்டங்களி லிருந்து வந்து படிக்கும் மாண விகளுக்கு விடுதிச் செலவுகளை வீட்டில் செலுத்தும் நிலையில், கல் லூரி செலவுகளைத் தானே பார்த் துக்கொள்வதால் பெற்றோரிடம் பணம் கேட்க வேண்டிய சூழல் இப் போது இல்லை என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறினார். திருவண்ணாமலை மாவட்டத் தைச் சேர்ந்த ஒரு மாணவர், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங் கப்படும் கல்வி உதவித்தொகை மிகவும் பயனுள்ளதாக இருப்ப தாகத் தெரிவித்தார். விவசாய குடும்பப் பின்னணியைக் கொண்ட  தான், இதுவரை கல்விச் செலவு களைச் சமாளிக்க பகுதிநேர வேலைக்குச் சென்று வந்ததாக வும், இப்போது அந்த அழுத்தம் இல்லை என்றும் கூறினார். மாதம்  ரூ.1,000 என்பது ஏழை எளிய குடும் பத்தில் இருந்து வருவோருக்கு பெரும் தொகை என்றும், இத் திட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கோவை மாவட்டத்தில் கல்வி  பயில பல்வேறு மாவட்டங்களிலி ருந்து வரும் மாணவ, மாணவி கள், இங்கு தங்கி, கல்விச் செலவு களுக்காகப் பகுதிநேர வேலை களைச் செய்து வந்தனர். தற் போது தமிழ்நாடு அரசின் புது மைப் பெண் மற்றும் தமிழ் புதல் வன் திட்டங்களால் மாணவர்கள் கல்விச் செலவு பற்றிய அழுத் தம் இல்லாமல் படித்து வருகின்ற னர். இத்திட்டங்கள் உயர்கல்வி செல்லும் ஏழை எளிய மாணவர் களை உற்சாகப்படுத்தி, அவர்க ளின் கனவுகளை நனவாக்கும் ஒரு  பாலமாக அமைந்துள்ளன. -கவி