tamilnadu

img

விவசாயிகளின் பேரெழுச்சிமிக்க போராட்டம் வெல்வது உறுதி... மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேச்சு....

மதுரை:
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் அரசரடி, மேலப்பொன்னகரம், பழங்காநத்தம் பகுதிக்குழுக்கள் போக்குவரத்து இடைக்கமிட்டி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள்சார்பில் மதுரை-பைபாஸ் ரோட்டில் உள்ளரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிரெண்ட்ஸ் ஜவுளிக்கடை மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு முன்பு அரசரடி பகுதிக்குழுச் செயலாளர் கு. கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்,  பகுதிக்குழுச் செயலாளர்கள் வை. ஸ்டாலின், கா.இளங்கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்இரா.லெனின், ஆர்.சசிகலா, விசிக தொகுதிபொறுப்பாளர் ப.ரவிக்குமார்  உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது:-

தில்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது,  தேநீர்  வேண்டுமா?  உணவு சாப்பிடுகிறீர்களா?  சம்மதித்தால் உங்களுக்கும் சேர்த்து நாங்கள் சமைக்கிறோம் எனக் கூறியுள்ளனர்.  நாட்டில் மற்ற எல்லோரையும் விட விவசாயிக்குசற்று சுயமரியாதை அதிகம் அதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று கூறி யுள்ளனர்.  நாட்டில்  உரிமைக்காக, விடுதலைக்காக போராடக்கூடிய ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய போராட்டத்தை விவசாயி
கள் நடத்தி வருகிறார்கள். 16 கிலோ மீட்டருக்கு டென்ட் அடித்து உட்கார்ந்திருந்த விவசாயிகள்,  23 கிலோ மீட்டர் நீளத்துக்கு டென்ட்அடித்து இருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர்.  தில்லியை நோக்கி உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாபில் இருந்து வாகனங்களில் சென்றுள்ள விவசாயிகள் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டுள்ள னர். இந்திய வரலாற்றில் இதுவரை நடந்திராதஒரு போராட்டம். ஆடிக் காற்றில்  அம்மியும் நகரும் என்பார்கள். அதைப் போல விவசாயிகள் போராட்டம். மத்திய அரசை  மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வைக்கும்.தொழிற்கூடங்கள் அமைக்கிறோம்  என்ற பெயரில் மத்திய அரசு  விளை நிலங்களை பறித்து அம்பானி, அதானிக்கு வழங்கி வருகிறது. 130 கோடி மக்கள் தொகையில் 60 கோடிமக்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியாளர்கள் அவர்களுடைய உரிமையைப் பறித்து  இந்திய உணவுச் சந்தையை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கின்றனர். கொடூரமான வேளாண் சட்டங்களைதிரும்பப்பெறும் பிரச்சனையில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை எனக் கூறி  விவசாயிகள் தில்லியை நோக்கி சென்று கொண்டிருக் கிறார்கள்.

ஹரியானா மாநில பாஜக கூட்டணிக் கட்சி அமைச்சர் கவுர், விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துள்ளார். விளையாட்டுப் போட்டியில் தங்கம் வாங்கிய வீரர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உணவு பரிமாறுகிறார். எல்லையில்  பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.தில்லியில் போராட்டத்தில் பங்கேற்ற சில விவசாயிகள் மரணம டைந்துள்ளனர். மரண
மடைந்தாலும் போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

;