tamilnadu

img

தொழிலாளி வர்க்கத்தின் தோழன் தீக்கதிர்

ஊடக உலகின் உண்மை பேரொளியாக திகழும் தீக்கதிர் நாளேட்டின் வைரவிழா, மலர் வெளியீடு, சந்தா வழங்கும் விழா என முப்பெரும் விழாவில் பங்கேற்றது பெருமையாக உள்ளது.  இந்த விழாவில் கலந்துகொள்ள வேண் டும் என்று முதல்வரிடம் சிபிஎம் மாநிலச் செயலாளர் கடிதம் வழங்கிய அரைமணி நேரத்தில், நான் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல்வரிடமிருந்து உத்த ரவு வந்தது. சூரியக்கதிர் கட்சியில் இருந்து தீக்கதிர் விழாவிற்கு போகிறோம் என  நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். இது போன்ற பத்திரிகை நிகழ்ச்சியில் நான்  கலந்துகொள்வது இதுதான் முதன்முறை. இந்த விழா சிறக்க முதல்வர் அவர்கள் வாழ்த்துச் செய்தியையும் அனுப்பியுள் ளார்.  பெருமைமிக்க இந்த தீக்கதிர்  கொங்குமண்டலத்திலே கோவை யிலேதான் பிறந்திருக்கிறது என்பது  மகிழ்ச்சியான செய்தி.   1963-ஆம் ஆண்டில் தீக்கதிர் வார ஏடாக துவக்கப்பட்டு பிறகு நாளேடாக உயர்ந்திருக்கிறது. தொழிலாளி வர்க்கத் தின் தூண்டுகோளாகவும், தோழனாக வும், வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் திகழும் தீக்கதிர், சுடர்ஒளி வீசி 60 - ஆண்டு வைரவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மலர் வெளி யிட்ட வாய்ப்பினை தந்தமைக்கு என நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவிற்கு செல்ல அனுமதித்த தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்.  தீக்கதிர் நாளிதழ் உண்மையை உல கிற்கு எடுத்துக்காட்டும் வகையில் குற்றம் எங்கு நடந்தாலும் சுட்டிக்காட்டுகிறது. திமுக அரசாக இருந்தாலும் நல்ல வற்றைப் பாராட்டுவதும், ஏதேனும் தவறு நடந்தால் சுட்டிக்காட்டுவதுமான பணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது.  நீதிக்கட்சியில் துவங்கி தந்தை  பெரியார், அறிஞர் அண்ணா, கலை ஞர் ஆகியோரும் பத்திரிக்கையாளர் கள்தான்; நமது முதல்வரும் முரசொலி பத்திரிகை நடத்தி வருகிறார். எனவே பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிற இயக்கம்  திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேர்தல் வாக்குறு தியில் சொல்லப்பட்ட பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. பத்தி ரிகையாளர் குடும்பத்திற்கு முதல்வர் உத்தரவிற்கு இணங்க ரூ. 10 இலட்சம் காசோலை வழங்கினேன். இந்த அரசு பல்வேறு வகையில் பத்திரிகையாளர் களுக்கு துணை நின்றிருக்கிறது. அந்த வகையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த தீக்கதிர் வைரவிழாவில் கலந்து கொண்டது பெருமையாக  கருதுகிறேன்.

தீக்கதிர் வைரவிழா மலரை வெளியிட்டு  தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  ஆற்றிய உரையில் இருந்து