tamilnadu

img

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

புதுக்கோட்டை, செப்.15- பொதுமக்களுக்கும் குழந்தை களுக்கும் இடையூறாக புதுக்கோட்டை யில் இயங்கிவந்த அரசு டாஸ்மாக் கடையை ஒருமாதத்திற்குள் அகற்று வதாக அதிகாரிகள் உறுதியளித்துள் ளனர். புதுக்கோட்டை வடக்குராஜ வீதி யில் உள்ள பழனியப்பா முக்கத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வரு கிறது. இந்த வழியாக அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கும், அரசு உயர் தொடக்கப்பள்ளி, டிஎல்சி மேல்நிலைப்பள்ளி, சம்ஸ்கிருத ஒரியண்டல் உள்ளிட்ட பள்ளிகளுக்கும் செல்ல வேண்டும். இங்குள்ள டாஸ்மாக் கடையால் அப்பகுதி வழி யாக மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணிகள், பள்ளி மாணவ, மாணவி கள், பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். சட்டத்திற்குப் புறம்பாக நகராட்சி கட்டடத்தில் உள்வா டகையில் இந்தக் கடை இயங்கி வரு கிறது. இந்தக் கடையை அகற்ற  பல முறை வலியுறுத்தியும் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து கடையை அகற்ற வலியுறுத்தி வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடையின் முன்பு முற்றுகை நடைபெற்றது. சிபிஎம் புதுக்கோட்டை நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் தலைமையேற்றார். மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.நாக ராஜன், துரை நாராயணன், எஸ்.ஜனார்தனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சலோமி, பி.சுசீலா, எஸ்.பாண்டிச்செல்வி, வி.காயத்ரி,  வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அ. குமாரவேல், தலைவர் ஆர்.மகாதீர், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கணேசன் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.  தகவலறிந்து வந்த டாஸ்மாக் மாவட்ட துணை மேலாளர் கருப் பையா, காவல் ஆய்வாளர் ஜபார் உள்ளிட்டோர் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கடையை ஒரு மாதத்திற்குள் வேறு இடத்திற்கு அகற்றுவதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

;