13-ஆம் நாள் போராட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல் மதுரை, டிச.26- தென்மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலையான அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கேட்டுக்கொண்டுள்ளார். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை யில் 2021-2022-ஆம் ஆண்டு அரவையை உடனடியாகத் தொடங்க வேண்டும். மின் உற்பத்தியை தொடங்க வேண்டும். எத்த னால் உற்பத்தியை தொடங்க வேண்டும். உட்கட்டமைப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலை மையில் சர்க்கரை ஆலையில் 13 நாட்க ளாகக் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்று வருகிறது.
போராட்டத்தை ஆதரித்தும் சர்க் கரை ஆலையை திறக்க வலியுறுத்தியும் 13-ஆவது நாள் காத்திருப்புப் போராட் டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசினார். பாலக்கோடு, திருப்பத்தூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கு வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ள தமி ழக முதல்வர், தென் மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டுறவு சர்க்கரை ஆலை யான அலங்காநல்லூர் ஆலையை இயக்க வேண்டும். ஆலையை இயக்கி ஆலைத் தொழி லாளர்களையும், கரும்பு விவசாயி களையும் இதை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண் டும் என்று வலியுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் ஏற்கனவே முதல்வரை சந்தித்து ஆலையைத் திறக்க வலியுறுத்தியுள் ளார்.
தமிழக முதல்வர் கோரிக்கையை பரிசீலித்து விவசாயிகளின் போராட் டத்திற்கு தீர்வு காணவேண்டும். விரை வில் ஆலையை திறப்பதற்கான அறி விப்பை முதல்வர் வெளியிட வேண்டு மென சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டார். அரவையை தொடங்குவதன் மூலம் மின்உற்பத்தி, எத்தனால் உற்பத்தி செய்யலாம். இதன்மூலம் ஆலையை லாபகரமாக இயக்கலாம். இயக்க முடி யும் என்றார். காத்திருப்புப் போராட்டத்தில் பல் வேறு கிராமங்களைச் சேர்ந்த விவ சாயிகள், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கரு.கதிரேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் சி.ராமகிருஷ்ணன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், அலங்காநல்லூர் ஒன்றியச் செய லாளர் ஆண்டிச்சாமி, ஸ்டாலின் ஆகி யோர் கலந்துகொண்டனர்.