146 நூலகக் கட்டடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை, செப். 26 - பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ. 39.33 கோடி செலவிலான 146 நூலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், இதற்கான நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி யியல் பணிகள் கழகத்தின் சார்பில் 26 புதிய நூல்களை வெளியிட்ட அவர், ரூ. 4.01 கோடி மதிப்பீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்ட மைய நூலகத்திற்கும் அடிக்கல் நாட்டியுள்ளார். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழகத் தலைவர் ஐ. லியோனி, பொது நூலக இயக்குநர் ச. ஜெயந்தி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்கு நர் (பொ) மருத்துவர் மா. ஆர்த்தி, தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழக உறுப்பினர் செயலர் முனைவர் சி. உஷாராணி, பொது நூலக இணை இயக்குநர் ச. இளங்கோ சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
