tamilnadu

img

அக்.21 கும்பகோணத்தில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகள் அடையாள  அட்டை வழங்கும் முகாம் ரத்து 

அக்.21 கும்பகோணத்தில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகள் அடையாள  அட்டை வழங்கும் முகாம் ரத்து 

தஞ்சாவூர், அக். 19-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அக்.21 (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம், அன்றய தினம் அரசு விடுமுறை நாள் என்பதால் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.  “தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இது வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 3 கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. இதில் அக்.21 அன்று கும்பகோணம் கோட்டம் கே.எம்.எஸ்.எஸ் வளாகத்தில் நடைபெற இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம், அரசு விடுமுறை என்பதால் ரத்து செய்யப்படுகிறது’’ எனத்  தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கண்ணன் நகரில்  பார்வைக் குறைபாடு உடைய மாணவிகள் தங்கியுள்ள தாய்க் கரங்கள் இல்லத்தில், தஞ்சாவூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கம் சார்பில், தீபாவளிக் கொண்டாட்டம் நடைபெற்றது. பெண்களுக்கு  இனிப்பு, பட்டாசுகள் வழங்கப்பட்டன. இதில் தலைவர் கணபதி, பேராசிரியர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.