tamilnadu

img

வாழ்க்கை நீரோட்டம்


வாழ்க்கை என்பது நீரோட்டம்
வாழ்ந்து பாரு ஆறாட்டம்
மழைக்காலம் நீர் முட்டும்
வெயில் காலம் நீர் வற்றும்

வாடைக்காலம் கரை எட்டும் 
கோடைக்காலம் தரை தட்டும் 
சிந்தனைப் பறவை சிறகடிக்கும், 
செயலே உன்னை மேலேற்றும்
 
முயற்சி உன்னை முன்னேற்றும்
அயர்ச்சி உன்னை பின்தள்ளும்
தயக்கம் என்றும் கூடாது
தளர்ந்தால் உனக்கு வாழ்வேது?

சோம்பல் என்றும் கூடாதே, 
சுறுசுறுப்பை கைவிடாதே”
நம்பிக்கை வேண்டும் வாழ்வினிலே
நம்பாமை தள்ளிடும் தோல்வியிலே

உன்னை நம்பி நடைபோடு 
உயர்வு என்றும் உன்னோடு
வாழ்வில் வெளிச்சம் கொண்டாட்டம் 
இருளே தெரிந்தால் திண்டாட்டம் 

உண்மை சொல்லி உயர்ந்திடு
நன்மை செய்து நலம்கொடு
இடையூறை எதிர்த்தே இயங்கிடு
இன்பம் பெறுவாய் மகிழ்ந்திடு

;