தஞ்சாவூர், பிப்.8 - அமெரிக்காவிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, 2022 ஜூலை 1 முதல் 3 வரை தமிழ் வளர் மையத்தின் சார்பில் புத்தொளி பயிற்சியும், அமெரிக்காவின் இளந்தமிழ் மாணவர் களுக்குப் பண்பாட்டுப் பயிற்சிகளும் நேரடி யாக வழங்கப்பட இருப்பதாக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனை வர் வி.திருவள்ளுவன் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர் மையத்தின் வழியே, அய லகத் தமிழர்களுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் கடந்த 2020 இல் தமிழ் வளர் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட அமெரிக்காவின் எட்யுரைட் அறக்கட்டளை மூலம் ஏறத்தாழ 197 தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு 8 வார கால இணையவழிப் புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2022 ஜூலை மாதம் புத்தொளி பயிற்சி நேரடியாக நடத்தப்படவுள்ளது. அமெரிக்காவிலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான இப்பயிற்சியுடன் அமெரிக்காவின் இளந்தமிழ் மாணவர்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டுப் பயிலரங்கமும் எட்யுரைட் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படவுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தரை, எட்யுரைட் அறக்கட்டளையின் தலைவர் கீர்த்தி ஜெயராஜ், திங்கள்கிழமை நேரில் சந்தித்து இதற்கான ஒப்பந்தத்தினை மேற்கொண்டார். ‘இப்பயிலரங்கப் பயிற்சிக் காக, இந்தியா மற்றும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களு க்குப் பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்ய வுள்ளதாக’ கீர்த்தி ஜெயராஜ் தெரிவித்தார். ஆசிரியர்களுக்கான புத்தொளி பயிற்சியினை தமிழ் வளர் மைய இயக்குநர், முனைவர் குறிஞ்சிவேந்தனும், இளந்தமிழ் மாணவர்களுக்கான பண்பாட்டுப் பயிற்சியினை தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் சி.தியாகராஜனும் மேற்கொண்டு வருகின்றனர்.