அலிகார், செப்.16- நாட்டில் உள்ள பழமையான பல்கலைக்கழகங்களில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் ஒன்று. இங்கு 47 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். 1800 பேராசிரி யர்கள் பணிபுரிகிறார்கள். 100 -க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இங்கு நடைபெற்ற பேராசிரியர் சங்க தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரி யை எஸ்.சாந்தினிபீவி போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக வரலாற்றில் பேராசிரியர் சங்கத்துக்கு தலைவராக ஒரு பெண், அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட சாந்தினி பீவி, தமி ழகத்தில் சேலத்தைச் சேர்ந்த வர். அலிகார் பல்கலைக்கழகத் தில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் வரலாற்றுத்துறை பேரா சிரியையாக உள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு அதே சங்கத்தில் செயற்குழு உறுப்பின ராகவும், 2015-ம் ஆண்டு கல்விக் குழு உறுப்பினராகவும் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும் முதல் பெண்ணாக சாதி த்து இருக்கிறார். தலைவர் பத விக்கு இதுவரை பேராசிரியை யாருமே போட்டியிட்டது இல்லை. இவர் முதல்முறையாக போட்டி யிட்டார். வரலாற்றில் ஆய்வுப் பணியையும் தொடர்கிறார். இவர் எழுதிய ‘கல்வெட்டு களில் தேவதாசி’ என்ற நூல் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.