தி ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!
நெல்லையில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி, ஆக. 3 - சாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து, இடதுசாரிக் கட்சிகள் சார் பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பொறியாளர் கவின் செல்வ கணேஷ் சாதி ஆணவப் படுகொலையை கண்டித்தும், தொடர் கொடூரமாக மாறிவிட்ட சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) நெல்லை சந்திப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ (எம்-எல்.) லிபரேசன் மாவட்டச் செயலா ளர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச்செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் மணி, சிபிஐ(எம்-எல்) கட்சி மாநில நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் க. ஸ்ரீராம் நிறைவுரையாற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். கிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மோகன், எம். சுடலை ராஜ், பீர் முகம்மது ஷா, சிபிஐ நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், பாலன், சிபிஐ (எம்எல்) நிர்வாகிகள் கருப்பசாமி, மாரிமுத்து, சிவகாமி நாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.