tamilnadu

img

தமிழ்நாடு நியாய விலைக்கடை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நியாய விலைக்கடை ஊழியர்  சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

மயிலாடுதுறை, ஆக.2 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நியாய விலைக்கடை ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏழை, நடுத்தர மக்களின் பசிப் பிணியை போக்கும் மகத்தான பொது விநியோகத் திட்டத்தை தனி துறையாக்க வேண்டும். மார்ச் 2025 உடன் ஊதிய மாற்றத்திற்கான ஊதிய குழுவை அமைக்க  வேண்டும். ப்ளூடூத் (POS சர்வர்) விநியோ கத்தை கைவிட்டு பொருட்களை பையில் வைத்துக் கொடுக்க வேண்டும். பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கௌரவ தலைவர் யூ.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.எட்வர்டு, மாவட்ட பொருளாளர் தீபலெட்சுமி, மாவட்டத் தலைவர் பூபாலன், மாவட்ட துணைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.மாரியப்பன், மாவட்ட நிதி காப்பாளர் ராமானுஜம் ஆகியோர் நோக்கவுரையாற்றினர்.