tamilnadu

அங்கன்வாடி சங்கத்தை சீர்குலைக்க முயற்சி சிஐடியுவில் இருந்து டி.டெய்சி நீக்கம்

அங்கன்வாடி சங்கத்தை  சீர்குலைக்க முயற்சி சிஐடியுவில் இருந்து டி.டெய்சி நீக்கம்

சென்னை: சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சிஐடியு உடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 7வது  மாநில மாநாடு தூத்துக்குடி மாநகரில் கடந்த அக்டோபர் 11  மற்றும் 12 தேதிகளில் எழுச்சிமிக்க முறையில் நடை பெற்றது. மாநாட்டில் சிஐடியுவின் தேசிய செயலாளர்களில் ஒருவரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சம்மேளனத்தின் அகில இந்திய  பொதுச் செயலாளருமான ஏ.ஆர்.சிந்து சிஐடியு தமிழ்நாடு மாநில உதவிப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆர்.ரசல், ஆர்.எஸ்.செண்பகம், எம்.தனலட்சுமி, ஆகி யோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். மாநாட்டின் நிறைவாக முந்தைய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் தரப்பில் உருவாக்கப்பட்ட  புதிய  தலைமைக்கான நிர்வாகிகள் ஆலோசனையாக பட்டி யலை சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்த டி.டெய்சி முன்மொழிந்தார். இந்த ஆலோசனைப் பட்டியலை ஜனநாயக முறைப்படி அனைத்து பிரதிநிதி களுக்கும் விநியோகித்து, ஒப்புதல் கோரப்பட்டது. இதில்  தலைவர் பொறுப்புக்கு முன்மொழியப்பட்ட இ.பாக்கிய மேரி, பொதுச்செயலாளர் பொறுப்புக்கு முன்மொழியப்பட்ட எஸ்.தேவமணி ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். துணை பொறுப்புகளுக்கு போட்டி  ஏற்பட்டதால் தேர்தல் நடத்தப்பட்டு அதிக வாக்குகள் பெற்ற வர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 3 துணைப் பொறுப்பு  காலியிடங்களை பின்னர் நிரப்புவது என மாநாட்டில்  முன்மொழியப்பட்டு பிரதிநிதிகளால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா ளர் மற்றும் சிஐடியுவின் மாநில துணைத்தலைவர் பொறுப்பில் உள்ள டி.டெய்சி 16.10.2025 அன்று திருவண் ணாமலை மாவட்டம் செங்கத்தில் தனது ஆதரவாளர் சிலரை வைத்து போட்டி சங்கம் துவக்கிடும் செயலில் ஈடு பட்டுள்ளார். இது சிஐடியு அமைப்பை சீர்குலைக்கும் அமைப்பு விரோத செயலாகும். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் ஜனநாயக முறைப்படியான தேர்தலுக்கு எதிரான தன்னிச்சையான செயல்பாடு என்ற காரணத்தால், சிஐடியுவின் மாநில நிர்வாகி கள் கூட்டத்தில் விவாதித்து, மேற்கண்ட அமைப்பு விரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ள டி.டெய்சி  சிஐடியுவின் மாநில துணைத்  தலைவர் பொறுப்பில் இருந்தும், சிஐடியுவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் நிரந்தர மாக நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்படுகிறது. சங்கத்தை சீர்குலைக்கும் செயலுக்கு ஊழியர்கள் யாரும் ஆதரவு தரவேண்டாம் எனவும், சங்கத்தை ஒற்றுமை யுடனும், ஜனநாயக செயல்பாட்டுடன் கொண்டு செல்ல துணை நிற்கவும் சிஐடியு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.