குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அதனடிப்படையில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளையும் நெறிமுறைகளையும். (Standard Operating Procedures- SOP) வகுத்திட வேண்டும். பட்டியலின பழங்குடியின குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், திருநர் சமூக குழந்தைகள் போன்ற ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுவதை குழந்தைகள் பாதுகாப்பு கொள்கையின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும். இதற்காக ஆசிரியர் மாணவர் அமைப்புகள், பெண்கள் இயக்கங்கள், பள்ளி நிர்வாகங்கள்,குழந்தை உரிமை செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் போன்றவற்றின் பிரதிநிதிகளை அழைத்து கலந்தாலோசனை நடத்திட வேண்டும்.
மாநில அரசின் கொள்கையின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கையை வகுத்திட வேண்டும். அதனை செயல்படுத்துவதற்கான நெறிமுறைகளையும் (Standard Operating Procedures) (SOP) உருவாக்க வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பதற்கு அமைக்கப்படும் எவ்விதக் குழுவானாலும் மேற்கூறிய கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளின் அடிப்படையிலேயே தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவேண்டும்.
பள்ளியில் மட்டுமல்லாமல் பள்ளியின் சார்பில் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகிற எந்த இடமானாலும் (விளையாட்டுப்போட்டிகள், பயிற்சி மையங்கள், சுற்றுலா, கலாச்சார விழாக்கள் போன்றவை) குழந்தை பாதுகாப்பு கொள்கையும் நெறிமுறையும் அமலாக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் மற்றும் அங்கு பணிபுரியும் அனைவரும் குழந்தை பாதுகாப்பு பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுக்களை சட்டப்படி அமைத்திட வேண்டும். அமைக்காத பள்ளியின் நிர்வாகங்களுக்கு போக்சோ சட்டத்தின் அடிப்படையில் அபராதம் விதித்திட வேண்டும். பள்ளிகளில் தேவையான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்காக அரசு வெளியிடும் அனைத்து ஆணைகளும் தனியார் பள்ளிகள், பன்னாட்டு பள்ளிகளையும் கட்டுப்படுத்துவதாக அமைந்திட வேண்டும். குற்றத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத தனியார் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். தலையீடு செய்ய வேண்டிய பொறுப்பும், தடுக்கும் பொறுப்பும் நிர்வாகத்தை சார்ந்தது என்பதை உணர்த்தவேண்டும். பள்ளி மட்டுமல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு வரும் வாகனங்கள் உட்பட பள்ளித்தலமாகக் கருதி அதற்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பாலியல் துன்புறுத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் குறித்த பதிவேடு (Registry) மாநில அரசால் பராமரிக்கப்பட்டு, அடுத்து அரசு பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் ஆசிரியர் நியமிக்கப்படும் போது, இப்படிப்பட்டவர்கள் நியமிக்கப்படாமல் கண்காணிக்க வேண்டும்
குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு கொள்கை மற்றும் நெறிமுறைகள், போக்சோ சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குழந்தை தொழி லாளர் ஒழிப்பு சட்டம் உள்ளிட்டவை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், ஊழியர்கள், பள்ளி நிர்வாகத்தினர், கல்வித்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
பள்ளிப் பாடத்திட்டத்தில் பாலின நிகர்நிலை கருத்துக்களும் போக்சோ சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் உள்ளிட்டவை குறித்த அம்சங்களும் இடம் பெற வேண்டும். அந்தந்த வயதுக்குப் பொருத்தமான பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
காவல் துறையினர், பிராசிக்யூஷன் தரப்பினர், நீதி துறையினர், மருத்துவத் துறையினர் போன்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகளை கையாளுகிற அனைவருக்கும் பட்டறைகளையும் பயிற்சிகளையும், முறையான குறிப்பின் (Module) அடிப்படையில் தொடர்ந்து நடத்திட வேண்டும்.
தங்களது பாதிப்பினை வெளியே சொல்ல தயங்கும் அல்லது அச்சப்படும் குழந்தைகளின் மௌனத்தை உடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் சுதந்திரமாக கருத்து சொல்லக் கூடிய இடமாக கல்விக்கூடங்களும் வகுப்பறைகளும் செயல்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் உளவியல் ஆலோசகரை நியமனம் செய்ய வேண்டும். அவருக்கு ஒதுக்கப்படும் அறை, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் அலுவலக மற்றும் ஓய்வு அறைக்கு அருகாமையில் இல்லாமல் குழந்தைகள் நம்பிக்கையோடு போய் வரக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும். கல்வி நிலையத்திற்கு தொடர்பு இல்லாத, வெளியே உள்ள சமூக ஆர்வலர்கள் அல்லது அமைப்புகளிடம் குழந்தைகள் தங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையை சொல்வதற்கான ஏற்பாடுகள்வேண்டும்.
குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் வரும்போது தலையிட வேண்டிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம், மாவட்ட குழந்தை நல குழுக்கள், கல்வித்துறை, சமூக நலத்துறை, மருத்துவத்துறை போன்ற அனைத்து முகமைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டங்களில் ஆண்டுக்கு 4 முறையாவது மாவட்ட ஆட்சியர் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து முகமைகளையும் ஒருங்கே அழைத்து விவாதிக்க வேண்டும்.
கிராமப்புற குழந்தை பாதுகாப்பு குழுக்கள் அனைத்து கிராமங்களிலும் உருவாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது 2000ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலாக வெளிவந்துள்ளது மட்டுமல்ல, 2012இல் இப்படிப்பட்ட குழுக்களை அமைக்க ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் அந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், சுயஉதவி குழு உறுப்பினர், அங்கன்வாடி, ஊழியர், சுகாதார பணியாளர் உள்ளிட்டவர்களை உறுப்பினர்களாக இணைக்க வேண்டும். இது ஆண்டுக்கு மூன்று முறை கூடி குழந்தை உழைப்பு, குழந்தை திருமணம், குழந்தைகள் மீதான தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றங்கள் நடந்தவை குறித்தும், நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட பாதிக்கும்மேல் நகர்புறமயமாகி இருக்கும் நேரத்தில் நகர்ப்புற பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் அமைப்பது பற்றி அரசாங்கம் சிந்திப்பதில்லை. எனவே நகர்புறங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.
புகார் கமிட்டி குறித்தும், பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைக்குரிய குற்றம் என்பது பற்றியுமான முழக்கங்கள் பள்ளிகளில் அனைவரும் பார்க்கக்கூடிய இடத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். ஊடகங்கள் மூலமாக இவை குறித்த விளம்பரங்களும் வெளியிடப்பட வேண்டும்.
கல்வி உரிமை சட்டத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள உடல் ரீதியான மற்றும் உள ரீதியான துன்புறுத்தல் என்பதோடு பாலியல் துன்புறுத்தல் என்பதையும் இணைத்திட வேண்டும்.
முறையாக விசாரிக்காத அல்லது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 166ஏ வின் கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
போக்சோ சட்டம், அனைத்து பாலியல் குற்றங்கள் குறித்தும் கட்டாயமாக காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும், இல்லையேல் தண்டனை எனக் குறிப்பிடுகிறது. சில சமயம் பாலியல் சீண்டல் பிரச்சனைகளை காவல்துறைக்கு கொண்டு செல்ல பாதிக்கப்பட்ட குடும்பம் விரும்பாது. சில சமயம் குற்றம்சாட்டப்பட்டவர் தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியர் என்னும்போது இதர ஆசிரியர்கள் புகார் செய்ய அச்சப்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே பொருத்தமாக இப்பிரிவை திருத்த வேண்டிய தேவை உள்ளது.
போக்சோ சட்டம், அனைத்து பாலியல் குற்றங்கள் குறித்தும் கட்டாயமாக காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும், இல்லையேல் தண்டனை எனக் குறிப்பிடுகிறது. சில சமயம் பாலியல் சீண்டல் பிரச்சனைகளை காவல்துறைக்கு கொண்டு செல்ல பாதிக்கப்பட்ட குடும்பம் விரும்பாது. சில சமயம் குற்றம்சாட்டப்பட்டவர் தலைமை ஆசிரியர் அல்லது மூத்த ஆசிரியர் என்னும்போது இதர ஆசிரியர்கள் புகார் செய்ய அச்சப்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே பொருத்தமாக இப்பிரிவை திருத்த வேண்டிய தேவை உள்ளது.
ஆறு மாத காலத்திற்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும் என்று போக்சோ சட்டம் குறிப்பிட்டாலும், பெரும்பாலான வழக்குகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகிற நிலைமையை முற்றிலும் மாற்ற வேண்டும். விரைந்து முடிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை நீதிமன்றங்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் புகார் கொடுக்க முன்வரும் மனநிலை மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் உருவாகும்
குற்றம் இழைக்கிற ஆசிரியர்கள் பல சந்தர்ப்பங்களில் மதிப்பெண் போடுவதற்கும், நடத்தை சான்றிதழ் அளிப்பதற்கும் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தலை செய்கின்றனர். எனவே குறிப்பிட்ட ஆசிரியர் மீது புகார் வந்தால், புகார் கொடுத்தவர்களின் தேர்வை திருத்துவது, சான்றிதழ் அளிப்பது போன்ற பணிகள் வேறு ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
அண்மைக்காலத்தில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட 100 வழக்குகளை எடுத்து பல கோணங்களில் ஆய்வு செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக பெண்கள் அமைப்புகளின் உதவியையும் நாடலாம். இதன் மூலம் தவறுகளும் சறுக்கல்களும் எந்தெந்த இடத்தில் நேர்கின்றன என பரிசீலிக்க முடியும்.. நேர் செய்யும் நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்.
கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்ட சமூக நீதித்துறை புதுப்பிக்கப்பட்டு சமத்துவ கோட்பாடுகளை வலிமையாக பிரச்சாரம் செய்திட வேண்டும். பாலின சமத்துவம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து குறும்படம், விளம்பரங்களை தமிழக அரசு தயாரித்து தொடர்ச்சியாக வெளியிட வேண்டும்.
குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க மாநில அளவில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாநில குழந்தை பாதுகாப்பு சங்கம், மாவட்ட அளவில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, இளையோர் நீதி வாரியம் போன்ற அமைப்புகள் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர குழந்தைகளை மீட்பதற்காக சைல்டு லைன் என்ற அமைப்பும் குழந்தைகளை பராமரிக்கவும் பாதுகாக்கவும் ஐந்து வகையான குழந்தை பாதுகாப்பு இல்லங்களும் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளதோடு தமிழகத்தில் சமூக நலத்துறை அரசாணை மூலம் ஆறு வகையான குழந்தை பாதுகாப்பு குழுக்களும் அமைக்க வழி செய்யப்பட்டுள்ளது இவற்றை வலுப்படுத்த வேண்டிய நேரம் இதுவாகும்.
மாநில குழந்தை பாதுகாப்பு சங்கத்தின் கீழ் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இவை சிறப்புத் திட்டத்தின் படி அமைக்கப்பட்டவை. இதன் பணியாளர்கள் அரசின் நேரடி பணியாளர்களாக இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுகளில் ஒவ்வொன்றிலும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் உட்பட 11 பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 16 மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்களை தவிர மற்றவர்கள் அனைவருமே ஒன்று முதல் பத்து ஆண்டுகள் வரை தற்காலிகமாக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரே சம்பளத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பணி நீட்டிக்கப்பட்டு பணியாற்றி வரும் ஊழியர்கள் ஆவார்கள். இதைப்போலவே மாவட்ட குழந்தைகள் நலக்குழு, இளையோர் நீதி வாரியம் ஆகியவற்றிலும் தற்காலிக பணியாளர்கள் இதே நிலையில்தான் இருந்து வருகிறார்கள். இதனால் பணித்திறன் பாதிக்கப்படுவதோடு அவர்களது உரிமைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதித்துறை நடுவர் போன்ற அதிகாரங்களைக் கொண்ட மாவட்ட குழந்தை நல குழு செயல்படுகிறது. இந்த குழுக்களின் நியமனங்கள் அரசியல் சார்பின்றி நடைபெற வேண்டும் மேலும் குழுக்களுக்கு இளையோர் நீதிச் சட்டம் பிரிவு 27 -ன்படி கூறப்படும் செயலாளர் பணியிடம் அனுமதிக்கப்படாமல் உள்ளது உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதித்துறை நடுவர் போன்ற அதிகாரங்களைக் கொண்ட மாவட்ட குழந்தை நல குழு செயல்படுகிறது. இந்த குழுக்களின் நியமனங்கள் அரசியல் சார்பின்றி நடைபெற வேண்டும் மேலும் குழுக்களுக்கு இளையோர் நீதிச் சட்டம் பிரிவு 27 -ன்படி கூறப்படும் செயலாளர் பணியிடம் அனுமதிக்கப்படாமல் உள்ளது உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதித்துறை நடுவர் போன்ற அதிகாரங்களைக் கொண்ட மாவட்ட குழந்தை நல குழு செயல்படுகிறது. இந்த குழுக்களின் நியமனங்கள் அரசியல் சார்பின்றி நடைபெற வேண்டும் மேலும் குழுக்களுக்கு இளையோர் நீதிச் சட்டம் பிரிவு 27 -ன்படி கூறப்படும் செயலாளர் பணியிடம் அனுமதிக்கப்படாமல் உள்ளது உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை அரசாணை எண் 30, 31 (20-09-2020) - ல் சொல்லப்பட்டுள்ள ஊரகப் பகுதிகளில் ஊராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்கள், வட்டார அளவிலான பாதுகாப்பு குழுக்கள், மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழு மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் பேரூராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்கள், நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்கள் மற்றும் மாநகராட்சிகளில் மண்டல அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்கள் ஆகியன பெயரளவிலேயே உள்ளன இவை முழுமையாக அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கவில்லை. இவை சிறப்பாக செயல்படுவதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தை பாதுகாப்பு குழுக்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கு குழந்தைகள் பாதுகாப்புத்துறை ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2013-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட போதிலும் பெயரளவிலான தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை வலுப்படுத்த கீழ்கண்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
- இந்த ஆணையத்திற்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் 2005, பிரிவு 21 -ன்படி முழுநேர செயலாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். மாநில அரசின் செயலாளர் நிலைக்கு குறையாத ஒருவரை இந்த பதவியில் நியமனம் செய்யப்பட வேண்டும் என சட்டம் தெரிவிக்கிறது. ஆனால் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது முதல் இன்றுவரை இந்த பதவிக்கு இத்தகைய ஒருவரை செயலாளர் பதவியில் மாநில அரசு நியமிக்கவில்லை.
- தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், 2005, பிரிவு 13 மற்றும் 14-ன்படி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து புகார்களை எடுத்துக் கொள்ளும் அதிகாரத்தையும் சிவில் நீதிமன்றம் போல வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளதால் ஆணையத்துக்கு, தற்போது ஆணையத்தில் உள்ள இணை இயக்குனருக்கு பதிலாக சட்டத்துறையிலிருந்து துணைச் செயலாளர் / பதிவாளரை உடனே நியமிக்க வேண்டும். தற்போதுள்ள இணை இயக்குநரும் சமூக பாதுகாப்பு துறையின் அலுவலர் என்பதால் அவர் ஆணை யத்தில் பணியாற்றுவது இயற்கை நீதி தத்துவத்திற்கு எதிரானதே.
- மேலும் தற்போது தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுதந்திரமாக செயல்பட இந்த ஆணையத்தை தமிழ்நாடு அரசின் பொது மற்றும் பணியாளர் சீர் திருத்த துறையின் கீழ் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்படுவது போல கொண்டுவர வேண்டும். ஆணையத் திற்கு தேவையான பணி யாளர்களை நியமித்தும் போதிய நிதி ஒதுக்கீட்டை வழங்கியும் அதன் உட் கட்டமைப்பை வலுப் படுத்த வேண்டும்.
- இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது முதலே இந்த ஆணையத்தின் செயலாளர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக சமூக பாதுகாப்பு இயக்குனருக்கு ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய அரசு ஆட்சியாளர்களின் இத்தகைய செயல் இயற்கை நீதிக்கு எதிரானதாகும். சமூக பாதுகாப்பு துறையின்கீழ் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, இளையோர் நீதி வாரியம் போன்றவையும் சைல்டு லைன், குழந்தை பாதுகாப்பு இல்லங்களும் செயல்படுகின்றன. இளையோர் நீதி சட்டம் பிரிவு -109 -ன்படி மேற்படி அமைப்புகளை கண்காணிக்கும் பணியை மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் செய்கிறது. சமூகப் பாதுகாப்புத் துறையில் நிர்வாகத் தலைவராக செயல்படுபவர், அவர் துறையை கண்காணிக்கும் கண்காணிப்பு அமைப்பிற்கும் கூடுதலாக செயலாளராக பணிபுரிவது என்பது ஒரு நீதிபதி தன் வழக்கில் நீதிபதியாக இருக்கக் கூடாது எனும் இயற்கை நீதி கோட்பாட்டுக்கு எதிரானதாகும். இத்தகைய நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும். மேலும் சமூகப் பாதுகாப்புத் துறையின் அலுவலர்கள் ஆணையத்தில் அயல் பணி அடிப்படையில் பணி அமர்த்தக் கூடாது.
- இந்த ஆணையத்திற்கு போதுமான பணியாளர்கள், நிதி ஒதுக்கீடு கடந்த எட்டு ஆண்டுகளாக செய்யப்படவில்லை இதனால் ஆணையம் முழுமையாக செயல்படாத நிலையே நீடிக்கிறது. ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் மற்றும் இதர படிகள் மிகக் குறைவாக இருக்கின்றன. இவை உரிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் குழந்தை பாதுகாப்பு தொடர்பான ஆய்வு, கண்காணிப்பு, விசாரணைகளை மேற்கொள்ளும் இந்த ஆணையத்தில் ஒரு இணை இயக்குனர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு கணக்கு அலுவலர், ஒரு உதவியாளர் இரண்டு சுருக்கு எழுத்தர்கள் மட்டுமே உள்ளனர். இந்த ஆணையத்தில் ஆய்வு கண்காணிப்பு விசாரணை மற்றும் இதர பணிகளுக்கு என 4 பிரிவுகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பிரிவிற்கும் நியமிக்கப்பட வேண்டும், குறிப்பாக விசாரணைப் பிரிவில் ஒரு பதிவாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த பதிவாளர் தலைமைச் செயலகத்தில் சட்டத்துறையில் துணைச்செயலாளர் குறையாத நிலையில் உள்ளவராக இருக்க வேண்டும்.
- தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் இதர குழந்தைநல குழுக்களில் உறுப்பினர்களை நியமனம் செய்யும் போது அரசியல் தலையீடு இல்லாமல் குழந்தை உரிமைகள் குறித்த பல்வேறு அம்சங்களில் நிபுணத்துவம்பெற்றவர்கள், களப்பணி ஆற்றுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.