tamilnadu

img

குடியரசு துணைத்தலைவர் தேர்தல் தமிழ்நாட்டில் ஆதரவு திரட்டினார் சுதர்சன் ரெட்டி

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்

தமிழ்நாட்டில் ஆதரவு திரட்டினார் சுதர்சன் ரெட்டி

சென்னை, ஆகஸ்ட் 24  குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் நீதியரசர் பி. சுதர்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) சென்னையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.   இரு வேட்பாளர்கள்  செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் இந்தியா  கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா மாநில ஆளு நரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இரு வரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன.   வரவேற்பு நிகழ்ச்சி  எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள  தனியார் விடுதியில் வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்,  மக்களவை உறுப்பினர்கள் சு. வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம், விசிக தலைவர் தொல்.  திருமாவளவன் எம்.பி., மதிமுக பொதுச்செய லாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வி. செல்வராஜ், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு தேசிய மக்கள்  கட்சித் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட தலை வர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  சுதர்சன் ரெட்டியை ஏன் ஆதரிக்க வேண்டும்?  இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடிய மரியாதைக்குரிய சுதர்சன் ரெட்டி அவர்களை தமிழ்நாட்டுக்கு வருக, வருக, வருக என வரவேற்கிறேன். திமுக தலைவராக மட்டு மல்ல, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பிலும் முதலில் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.  “அரசியலமைப்புச் சட்டத்தைப் பாது காக்கும் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணி யாற்றிய நீங்கள், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்புக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர். அதனால்தான் இந்தியா கூட்டணி சார்பில் உங்களை வேட்பாளராக அறிவித்திருக் கிறோம். இந்தியா கூட்டணியினர் மட்டு மல்ல, ஜனநாயகத்தின் மீதும் மக்களாட்சித் தத்துவத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருக் கின்ற அத்தனை பேரும் உங்களைத்தான் குடி யரசுத் துணைத்தலைவர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.   சமூக நீதியை உயர்த்திப் பிடித்தவர்  “தென் மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி, உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, 1971-ல் வழக்கறிஞராகப் பணி  செய்யத் தொடங்கினார். பின்னர், ஆந்திர மாநில அரசு வழக்கறிஞர், ஒன்றிய அரசின் கூடுதல் நிலை ஆலோசகர், ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி, கவுகாத்தி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என்று படிப்படியாகத் தன்னு டைய வாழ்க்கையில் முன்னேறி, மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பு வகித்து, இன்றைக்குக் குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளராக உயர்ந்திருக்கிறார்” என்றார்.  “கிட்டத்தட்ட தன்னுடைய அறுபது ஆண்டு கால வாழ்வை சட்டம், நீதி ஆகியவற்றுக்காக அர்ப்பணித்திருக்கிறார். இவர் நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் நேர்மையாக, சுதந்திர மாகச் செயல்பட்டு, மக்களுடைய உரிமைகளை யும், சமூக நீதியையும் உயர்த்திப் பிடித்து, அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை யும் போற்றிப் பாதுகாத்தவர்” என்று பாராட்டினார். 

 

அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது அவசியம்

 “கோவா மாநில லோக் ஆயுக்தா தலைவராகவும் இருந்துள்ளார். இவர்  ஏன் இன்று தேவைப்படுகிறார் என்றால்,  அரசியலமைப்புச் சட்டத்தை பாஜக  சிதைக்க நினைக்கிற இந்த நேரத்தில்,  அரசியலமைப்புச் சட்டத்தைப் பாது காத்த நீதிபதியான இவர், அதைப் பாது காப்பதற்கான பொறுப்புக்குத் தேவைப் படுகிறார்” என்று குறிப்பிட்டார்.  

தமிழ்நாட்டு உணர்வுகளை வெளிப்படுத்தியவர்

“சுதர்சன் ரெட்டியைப் பொறுத்த வரை தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டின்  உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக்கூடிய வர். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநாட் டில் அவர் பேசியதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ‘இது திரு வள்ளுவர், பாரதியார், கலைஞர் ஆகியோ ருடைய மண். போராட்டக் குணத்தை இந்த மண் எப்போதும் விடுவதில்லை’ என்று சொல்லிப் புதிய தேசிய கல்விக்  கொள்கைக்கு எதிராகப் போராடுவது நமது கடமை என்றார்” என்று தெரிவித்தார்.  “’இது இந்தத் தேசத்திற்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி.  இவர்கள் கொண்டு வர நினைக்கக் கூடிய தேசிய கல்விக் கொள்கை மனித மாண்புகளுக்கு எதிரானது, நான் - எனது - என்னுடையது என்ற கலாச்சாரத்தை  மட்டுமே இது உருவாக்கும். பன்முகத்  தன்மையையோ, கல்வியில் ஜனநாய கத் தன்மையையோ புதிய தேசிய கல்விக்  கொள்கை உருவாக்காது’ என்று தன்னுடைய உரையில் கருத்துக்களைப் பதிவு செய்து தமிழ்நாட்டின் உணர்வு களையும் உறுதியோடு வெளிப்படுத்தி யவர்” என்றார்.  “இப்படி அரசியலமைப்புச் சட்டத் திற்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் முற்போக்குத் தன்மைக்காகவும் மக்க ளுக்காகவும் எப்போதும் பேசுகிற  இவரை நாம் குடியரசுத் துணைத்தலை வர் வேட்பாளராக முன்மொழிய இதை விடப் பெரிய காரணம் தேவையா?” என்  றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரி வித்தார்.  

அமித் ஷாவின் தரமற்ற பேச்சு

 “ஆனால் உச்ச நீதிமன்ற முன்னாள்  நீதிபதியை ஒன்றிய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார், ‘நக்சல்’ என்று சொல்கிறார்.  உள்துறை அமைச்சர் தன்னுடைய பொறுப்பை மறந்து ஒரு முன்னாள் நீதிபதி பற்றி அபாண்டமாகப் பேசியிருக்கிறார். அவர்  களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடிய வில்லை. அந்தக் கையாலாகாத நிலை யை மறைக்க நீதிபதி மேல் பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார்கள்” என்று கண் டித்தார்.  

தன்னாட்சி அமைப்புகள் சிதைப்பு

 “ஒன்றிய பாஜக அரசு இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது என்  றால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்க புலனாய்வு அமைப்புகளைப் பயன் படுத்திக்கொண்டுள்ளது. தன்னாட்சி அமைப்புகளைப் பாஜகவின் துணை அமைப்புகளாக மாற்றி வருகிறது. அர சியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்கி யுள்ளது” என்றார்.  “இந்தச் சூழலில் இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்  சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், சமூக  நீதி, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய வற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவ ராகச் சுதர்சன் ரெட்டி நமக்குக் கிடைத் திருக்கிறார்” என்று தெரிவித்தார்.  

நபர்கள் அல்ல, தத்துவமே வழிநடத்தும்!  

மேலும்,”ஒன்றிய பாஜக அரசு, தமிழ்  நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும்  எதிரான அத்துணை நடவடிக்கைகளை யும் செய்து விட்டு, தமிழர் என்ற முகமூடி அணிந்து ஆதரவு கேட்கிறார்கள். இது வெல்லாம் பழைய தந்திரம். தனி மனி தர்களை விடத் தத்துவங்கள்தான் அரசி யலை வழிநடத்தும். தனிநபர்கள் என்ப வர்கள் வெறும் பிம்பங்கள்தான். எந்தக்  கருத்தியலாக இருந்தாலும் மக்களுக் கான கருத்தைத்தான் ஆதரிக்க வேண்டும்” என்றார்.  “எனவே சட்ட ரீதியாகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடிய, வாதா டிய, தீர்ப்பு வழங்கிய சுதர்சன் ரெட்டி அவர்கள், இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்க, நாடாளுமன்ற மரபுகளைப் பாதுகாக்க, மக்களாட்சியைக் காக்க, அர சியலமைப்பைப் பாதுகாக்க, குடியரசுத் துணைத்தலைவராக வெற்றி பெற்று வர  வேண்டும்” என்று வாழ்த்தி முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தனது உரையை நிறைவு  செய்தார்.