பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி வெள்ளியன்று (டிச. 10) 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டத்திற்கு சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் அழைப்புவிடுத்திருந்தன. அதன்படி புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. மறைமலை அடிகள் சாலையில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு பிரதேச தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் சுதா சுந்தர்ராமன், சிஐடியு முன்னாள் செயலாளர் பெருமாள், துணைத் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.