tamilnadu

img

துறைமுகச் சொத்துக்களை தனியாருக்கு விற்பதை கைவிடுக!

தூத்துக்குடி, மே 15- துறைமுகச் சொத்துக்களை தனியா ருக்கு விற்பதை கைவிட வேண்டும். துறைமுக தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மறுக்கும் பட்சத்தில் போராட்ட ங்கள் நடைபெறும் என நீர்வழி போக்கு வரத்து சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் நரேந்திர ராவ் கூறினார். பெருந்துறைமுக தொழிலாளர் சம்மேளன‌ தேசிய ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்  கூட்டம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத் தில் மே 14 ,15 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. இதில் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு, போர்ட் மெரை ன்ஸ் அன்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் (ஹெச்.எம்.எஸ்), போர்ட் யுனைடெட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (ஹெச்.எம்.எஸ் டப்ளியூ), போர்ட் எம்பிளாயீஸ் டிரேட் யூனியன் (ஐஎன்டியூசி), தேசிய துறைமுக தொழிலாளர்கள் சங்கம் (ஐஎன்டியூசி), வ.உ.சி போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் (ஏஐடியுசி), போர்ட் ஜெனரல் ஸ்டாஃப் யூனியன் உள்ளிட்ட‌ தொழிற் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். அகில இந்திய துறைமுக தொழிலா ளர் சம்மேளனம், சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், சங்கம் சார்பாக நீர்வழி போக்குவரத்து அகில இந்திய பொது செயலாளர் (ஹெச்எம்எஸ்) முகமது ஹனிப் தலைமையில் தூத்துக்குடி வஉசி  சாலையில் உள்ள ஐஎன்டியுசி அலு வலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடை பெற்றது.

தொடர் போராட்டங்கள்

இதுகுறித்து அகில இந்திய நீர்வழி போக்குவரத்து சம்மேளனம் (சிஐடியு) பொதுச் செயலாளர் நரேந்திர ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 1.1.2022 முதல் அமல்படுத்த வேண்டிய துறைமுக தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும், இரண்டு ஆண்டுகள் நிலுவை யில் உள்ள போனஸ் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும், துறைமுகத்தின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், துறைமுக சொத்துக் களை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும், 1.01.2004 க்கு பின்னால் பணியில் சேர்ந்த  தொழிலாளர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் ஆகிய பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்ட இயக்கங்களை நடத்தி வருகிறோம், இந்த ஆண்டு முடிவிற்குள் இப்பிரச்சனைகள் குறித்து துறைமுக நிர்வாகம் மற்றும் ஒன்றிய அரசாங்கம் தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும், அப்படி மறுக்கும் பட்சத்தில், தொழி லாளர்கள் சார்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும், அதேபோல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்  அனைத்து துறைமுகங் களிலும் நடைபெறும் என்றார்.

ஆர்ப்பாட்டம்

முன்னதாக துறைமுகங்களை பாது காப்போம், தேசத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து தூத்துக் குடி பழைய துறைமுக நுழைவுவாயில் முன்பு பெருந்துறை முக தொழிலாளர் சம்மேளன  தேசிய ஒருங்கிணைப்பு குழு  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு வ உ சி துறைமுக லேபர் ட்ரஸ்டி  பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு அகில இந்திய தலைவர் நரேந்திர ராவ், ஹெச் எம் எஸ் கொச்சின் துறைமுகத்தை சேர்ந்த  முகமது ஹனிப், ஹெச் எம் எஸ் டபிள்யூ கொல்கத்தா துறைமுகம் ஆசிம் சூத்ரதார், ஏஐடியூசி சரவணன், ஐஎன்டியுசி பலராம் மற்றும் சிஐடியு சார்பில் ரசல், ஏஐடியூசி சார்பில் பாலசிங்கம், பாண்டி, ஹெச் எம் எஸ் டப்ளியூ சார்பில் கென்னடி, கிளிங்டன், ஹெச் எம் எஸ் சார்பில் சத்தியநாராயணன், சுரேஷ், ஐஎன்டியுசி சார்பில் ராஜகோபால், சந்திரசேகர், செல்வகுமார், கனகராஜ், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.