மோடி தலைமையிலான பாஜக அரசு தனியார்மய மாக்கலை எளிதாக்க பல சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துறைமுகங்களை கார்ப்பரேட் நிறுவனமாக படிப்படியாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட முக்கிய துறைமுக ஆணையச் சட்டத்தை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.
- பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து தொழிலை தாராளமயமாக்கியுள்ளது. அனைத்து பாதுகாப்புத் துறை கொள்முதல் விஷயங்களிலும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து ‘தொழில்நுட்பத்தை நமது கைக்கு மாற்றுவதை’ உறுதி செய்யும் நடைமுறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
- ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை சிதைத்து,41 ஒருங்கிணைக்கப்பட்ட ஆயுதத் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் இறுதி நோக்கத்துடன் ஏழு தனித்தனி கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றியுள்ளது.
- வங்கிகளின் வளங்களில் (அவை அனைத்தும் பொது நிதிகள்) பெருநிறுவனக் கொள்ளையை சட்டப் பூர்வமாக்கும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் திவால் சட்டம் மேலும் திருத்தப்பட்டுள்ளது.
- நிலக்கரி மற்றும் கனிமங்களின் ஏற்றுமதி உட்படவணிகச் சுரங்கத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்காக இயற்கை வளச் சட்டம் மற்றும் நிலக்கரி இந்தியா (தேசியமயமாக்கல்) திருத்தச் சட்டம் இயற்றப்பட்டன. வன நிலங்கள் உள்ளிட்ட நிலக்கரி மற்றும் பிற கனிம சொத்துக்களை தனியாரால் சுரண்டுவதற்கு இந்த அரசு வழிவகை செய்துள்ளது. கோல் இந்தியா மற்றும் பிற பொதுத்துறை சுரங்க நிறுவனங்கள் ஓரங்கட்டப்படுகின்றன.
- பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்க அனுமதிக்கும் பொதுக் காப்பீட்டுத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- பங்குச் சந்தையில் எல்ஐசியை பட்டியலிட வசதியாக 2021-22 நிதி மசோதாவின் ஒரு பகுதியாகஎல்ஐசி சட்டத்தில் கள்ளத்தனமாக மாற்றங்களைச் செய்துள்ளது.
- நாட்டின் மிகப்பெரிய முதலீட்டில் நிறுவப்பட்ட ஓஎன்ஜிசி எண்ணெய் வயல்களை, வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க, அரசு நிர்பந்திக்கிறது. இதன் விளைவாக ரிலையன்ஸ்இண்டஸ்ட்ரீஸ்மற்றும் ஒரு சில வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் கூட்டாக இணைந்து,நாட்டின் எண்ணெய் வளங்களின் முக்கியப் பயனாளிகளாக மாறப் போகின்றன.
- பொதுத்துறை உருக்கு நிறுவனம் - ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட், தனது சொந்த சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட இரும்புத் தாதுக்களுக்காக அரசாங்கத்திற்கு ஒரு பெரிய தொகையை தீர்வையாக செலுத்துகிறது. ஆனால் அதேவேளையில் தனியார் துறை உருக்கு நிறுவனங்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை டாடா, எஸ்ஸார், ஜிண்டால், மிட்டல் போன்ற பெரிய தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் முயற்சியே தவிரவேறில்லை.
- தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தையை கைப்பற்றும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ழு சேவைகளை ஏழு ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டது. அதன் விரிவாக்கத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்க அனுமதிக்கப்படவில்லை.பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என்பது பொன் முட்டையிடும் வாத்தை கொல்வதற்கு சமம்.தனியார்மயமாக்கல் என்பது மக்களின் பணத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகள்,
- அரசாங்கத்தின் விருப்பமான தனியார் நிறுவனங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு மடைமாற்றம் செய்வதற்கான ஒரு நடைமுறையே தவிர வேறில்லை.
- அரசின் சமீபத்திய பொறுப்பற்ற தனியார்மய மாக்கல் நடவடிக்கையின் மூலம், சாலை, ரயில், கப்பல் சொத்துக்கள், விமான நிலையங்கள், பெட்ரோலியம் மற்றும் தயாரிப்புக் குழாய்கள், இயற்கை எரிவாயு குழாய் இணைப்புகள், மின்சாரம் அனுப்பும் பாதைகள், ஆகிய அனைத்து உள்கட்டமைப்பு சொத்துக்களையும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. நிலக்கரிச் சுரங்கங்கள், தொலைத்தொடர்பு சொத்துகள், கிடங்குகள், ரியல் எஸ்டேட்கள், மைதானங்கள் & விளையாட்டு வளாகங்கள் என தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் தனியார் கைகளுக்கு, கிட்டத்தட்ட இலவசமாக தாரை வார்க்கப்படுகிறது. பாஜகஅரசின் தனியார்மய வெறி நிறுத்தப்பட வேண்டும்.