tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

திருடுபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ம்பகோணம், ஜூலை 6 - கும்பகோணத்தில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் மர்ம நபர்களால் திருடப்பட்ட செல்போன்களை மீட்பது தொ டர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  அந்த வகையில் கடந்த 2 வாரங்களில் பொதுமக்கள் பலர் தங்களின் செல்போன்களை தவறவிட்டது மற்றும் மர்ம நபர்களால் திருடப்பட்டது தொடர்பாக மேற்கு காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து காவல்துறை ஆய்வாளர் ரமேஷ், வழக்குப் பதிந்து செல் போன்களை மீட்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர். அதன்படி, கடந்த 2 வாரங்களில் பொதுமக்கள் தவறவிட்ட 25 செல்போன்களை மேற்கு காவல்துறையினர் மீட்டு உள்ளனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம். இந்நிலையில், மீட்ட  செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம், காவல் துறை ஆய்வாளர் ரமேஷ் ஞாயிறன்று ஒப்படைத்தார். இதில் காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் அங்கித் சிங் கூறுகையில், “ஆண்ட்ராய்டு செல்போன் பயன் படுத்துவோர், வாட்ஸ் அப் மூலம் பேசுவதை தவிர்க்கவும். இதனால் குற்றங்கள் அதிகமாக நடைபெறும். போன் மூலம்  மட்டுமே பேசவும்; வாட்ஸ் அப் அழைப்பை தவிர்க்க வேண்டும்” என்றார்

. டிராக்டர் மோதி இளைஞர் பலி

அரியலூர், ஜூலை 6 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சத்திரம் காலனி தெருவைச் சேர்ந்தவர் செல்வதுரை. இவரது  மகன் செந்தமிழ்ச்செல்வன் (23) டிப்ளமோ மெக்கானிக் என்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றினார்.  தற்போது உள்ளூரில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பூச்செடி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சத்திரம்  கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி செல்வதற் காக பிச்சனூர் வழியாக மான்ட்ரேரி மெயின் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மண் ஏற்றி வந்த டிராக்டர்  செந்தமிழ்ச்செல்வனின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பா ராத விதமாக மோதியது. இந்த விபத்தில் செந்தமிழ்ச்செல்வன் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய வெட்டியார் வெட்டு கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் விவேக் (26)  என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோழிப் பண்ணை  கொட்டகையில் தீ விபத்து

அரியலூர், ஜூலை 6 - அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த வல்ல குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார்(40). அப்பகுதியி லுள்ள தனது வயலில், கோழிப் பண்ணை வைத்துள்ளார். சனிக்கிழமை இவரது கோழிப்பண்ணையில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி எரிந்தது. இதனால் கொட்டகை முழுவதும் எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணை அணைத்தனர். ஆனால் கொட்டகை முற்றிலும் எரிந்ததால் ரூ. 10 லட்சம் மதிப்பி லான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து கீழப்பழு வூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

ஜெயங்கொண்டத்தில்  நாட்டு விதைத் திருவிழா

அரியலூர், ஜூலை 6 - அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நம்மாழ்வார் மரபு வேளாண் நடுவம் சார்பில் நாட்டு விதைத் திருவிழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இவ்விழாவை, சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க. கண்ணன் தொடக்கி வைத்தார். விழாவில், உணவுக்காடுகள் பரவலாக்கல் எனும் தலைப்பில் நடைபெற்ற கருந்தரங்கத்தில், தஞ்சை சுந்தரவிமல்நாதன் பேசுகையில், “பாரம்பரிய நெல் ர கங்களில் விளைந்த அரிசிகளை மதிய உணவு திட்டத்தில் சேர்க்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சி களில், மாணவர்களுக்கு, மரபு விதைகள் நாட்டுரக விதை களை பரிசாக வழங்க வேண்டும். பள்ளிகளில் விவசாயப் பாடப் பிரிவை 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை கட்டாயப் பாட மாக வைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.  மாணவர்கள் மத்தியில் விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார். சிறப்பு விருத்தினராக கடலூர் மாவட்டம், மரபு விவசாயி கள் ஒருங்கிணைப்பாளர் முருகன்குடி முருகன் கலந்து  கொண்டு பேசினார்.