tamilnadu

செப்.21, 22 திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில மாநாடு

செப்.21, 22 திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில மாநாடு

சேலம், ஜூலை 1- சுமைப் பணி தொழிலா ளர்கள் சம்மேளன மாநில மாநாட்டை செப்.21, 22  ஆகிய தேதிகளில் திருச்சி யில் நடத்துவது என சம்மே ளன நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன (சிஐடியு) நிர்வாகிகள் கூட்டம், செவ்வாயன்று சிஐடியு சேலம் மாவட்டக் குழு அலுவலகத்தில், சம்மே ளனத் தலைவர் ஆர்.வெங்க டபதி தலைமையில் நடை பெற்றது.  இக்கூட்டத்தில், தொழி லாளர்களுக்கு விரோதமான  சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறவும், விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த  தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும் ஜூலை 9 அன்று  நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை  நிறுத்தம், மறியலில் சுமைப் பணி தொழிலாளர்கள் பங்கேற்பது, மறியலை வெற்றிபெறச் செய்திட பிரச் சாரம், மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.  மேலும், சங்கத்தின் மாநில மாநாட்டை திருச்சி யில் செப்டம்பர் 21, 22  ஆகிய தேதிகளில் நடத்து வது எனவும் முடிவு செய்யப் பட்டது.  இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திரு வேட்டை, சம்மேளன பொதுச் செயலாளர் இரா. அருள்குமார், சிறப்புத் தலை வர் எஸ்.குணசேகரன், பொருளாளர் பி.குமார் மற்றும் சம்மேளன நிர்வாகிகள் பங்கேற்றனர்.