tamilnadu

img

ஒசூரில் நடைபெற்ற மாநில மாநாடு நிறைவு வாலிபர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

ஒசூரில் நடைபெற்ற மாநில மாநாடு நிறைவு வாலிபர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

ஒசூர், அக்.14- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின், தமிழ்நாடு மாநில 18-ஆவது மாநாடு ஒசூரில் அக்டோபர் 12 முதல் 14- ஆம் தேதி வரை  மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது.  ஞாயிற்றுக்கிழமை அன்று, மாலை மாபெ ரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தோழர் வைரமுத்து நினைவரங்கில் (சூடப்பா திருமண மகால்) திங்கட்கிழமை துவங்கி 2 நாட்கள் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.  சங்கத்தின் மாநில தலை வர் எஸ். கார்த்திக் தலைமை யில் நடைபெற்ற இந்த மாநா ட்டை, அகில இந்தியத் தலை வர் ஏ.ஏ. ரஹீம் எம்.பி.  துவக்கி வைத்துப் பேசினார்.  மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன், அரசியல் ஸ்தாபன அறிக்கையை முன்வைத்தார். மாநிலப்  பொருளாளர் எஸ். பாரதி வரவு -செலவு அறிக்கையை முன்வைத்தார். மாநாட்டில் 429 பிரதி நிதிகள் கலந்து கொண்ட நிலையில், அவர்களில் 12  பெண்கள் உள்பட 55 பேர்  அறிக்கைகள் மீதான விவா தத்தில் பேசினர். இந்திய மாணவர் சங்  கத்தின் மாநிலச் செயலா ளர் டி. சம்சீர் அகமது, அனை த்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாநிலச் செய லாளர் கே.பாரதி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.  தனியார் துறை வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் செவ்வாயன்று 80 கொண்ட புதிய மாநிலக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநிலத் தலைவராக செல்வ ராஜ், மாநிலச் செயலாள ராக எஸ். கார்த்திக், மாநி லப் பொருளாளராக தீ.  சந்துரு ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.  மாநிலத் துணைத் தலை வர்களாக டி. செல்வா, அபி ராமி, பிரகாஷ், ஐயப் பன், பாலமுரளி, இணைச் செயலாளர்களாக அருளர சன், மகாதீர், முகேஷ்,  சிவக்குமார், அக்ஷயா ஆகி யோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மத்திய செயற்குழு உறுப்பினர் ஜெய்க் சி. தாமஸ், மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.