tamilnadu

குடவாசலில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம்

குடவாசலில் “நலம் காக்கும் ஸ்டாலின்”  உயர்மருத்துவ சேவை முகாம்

திருவாரூர், செப். 6-  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், மூலங்குடி தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். இம்முகாம்களில், அடிப்படை மற்றும்  உயர்நிலை மருத்துவப் பரிசோதனை களுடன் முழுமையான உடல் ஆரோக்கியப்  பரிசோதனைகளும், மேற்கண்ட பரிசோத னைகள் மட்டுமன்றி, தமிழ்நாடு முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றி தழ் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகிறது.  முகாமில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.அசோக், மாவட்ட சுகா தார அலுவலர் மரு.சங்கீதா, இணை இயக்கு நர் (பொறுப்பு) மரு.ஜெயகுமாரி, வட்டார  மருத்துவ அலுவலர் மரு. ஜெகதீஷ், பேரூராட்சி மன்றத் தலைவர் மகாலெட்சுமி முருகேசன், திமுக தெற்கு ஒன்றியச் செய லாளர்  பா. பிரபாகரன், நகரச்செயலாளர் ஏ.கே.டி. சேரன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.