tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அக். 19 வரை கனமழை

சென்னை: தமிழகத் தில் அக்.14 முதல்19 ஆம்  தேதி வரை சில மாவட்டங் களில் கனமழைக்கு வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் மற் றும் கடலோர ஆந்திராவில் வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி நிலவுவதால் கோவை  மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீசன் பார்மா நிறுவனம் நிரந்தரமாக மூடல்; உரிமையாளர் கைது

சென்னை: இருமல் மருந்தால் மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் பலியான நிலையில், சென்னையை சேர்ந்த  ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்களை முழுவதுமாக ரத்து செய்து தமிழக அரசு திங்களன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து மருந்து நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு  நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன் இந்த விவகாரம் குறித்து ஒன்றிய அரசின்  மருந்து கட்டுப்பாடு அதிகாரிகளுக்கும் விரிவான அறிக்கை அனுப்பப்பட்டது. தலைமறைவான நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை தீவிரமாக தேடிய காவல்துறையினர் பின்னர்  கைது செய்தனர். இந்நிறுவனத்தில் 2021 மற்றும் 2022  ஆம் ஆண்டுகளில் ஆய்வு முறையாக மேற்கொள்ளப்பட்டா லும், கடந்த ஆண்டில் உரிய ஆய்வு மேற்கொள்ளாத காஞ்சி புரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. மேலும் கைதான ரங்கநாதன் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களிலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரு கிறது.

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை  ரத்து செய்து அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறைக் கான மாநிலக் கல்விக் கொள்கை 2025ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வெளியிட்டது. அதில் தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும்  இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக முதல மைச்சர் தெரிவித்தார். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வகுப்பு மாணவ-மாணவி களுக்கு மட்டுமே இருந்து வந்த பொதுத்தேர்வு, பிளஸ் 1  வகுப்புக்கும் கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் கொண்டு  வரப்பட்டது. பிளஸ் 1 வகுப்புப் பாடங்களுக்கு முக்கியத்துவம்  கொடுக்காமல் நேரடியாகப் பிளஸ் 2 வகுப்புப் பாடங்களை தனியார் பள்ளிகள் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டு வதைத் தவிர்ப்பதற்காகவும், பிளஸ் 1 வகுப்புக்கு முக்கியத்து வம் கொடுக்கவும் கொண்டு வரப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்றால், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பொதுத்தேர்வு பயத்திலேயே மாண வர்கள் இருப்பார்களே என அப்போது பல தரப்பினரும்  கருத்துத் தெரிவித்தனர். இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்குப்  பிறகு, பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என  மாநிலப் பள்ளிக் கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் சுமார் எட்டு லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி வந்த நிலையில், தேர்வு ரத்து  என்ற அறிவிப்பால் பிளஸ் 1 மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-ஐ செயல் படுத்தும் விதமாகப் 11 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து  செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்  நடப்புக் கல்வியாண்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு  மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்றும்,  முந்தைய 11 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோல்விய டைந்த மாணவர்கள் 2030 ஆம் ஆண்டு வரை அரியர் தேர்வு  எழுதலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற் றிய இரு பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது. பொருளியல் துறை தலைவராக பணியாற்றிய பேராசிரியர் கணேசன் மற்றும் தொலை உணர்வு துறை  இணை பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் மீது சில மாணவிகள்  பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். உள் புகார் குழு  விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொ டர்ந்து, செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆட்சி மன்ற கூட்டத்தில்  நடவடிக்கை பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி ஒப்புதல் அளித்ததையடுத்து, இரு வருக்கும் கட்டாய ஓய்வு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதா ரண்யம் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புஷ்ப வனம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, ராஜகோபால், ஜெய பால் ஆகியோருக்குச் சொந்தமான 5 மீன் பிடி படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 20  மீனவர்களை, இலங்கை கடற்கொள் ளையர்கள் தாக்கி,  மீன்பிடி வலை உள் ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம்  குறித்து காவல்துறை யினர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.