tamilnadu

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

சென்னை, டிச. 22- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. தாம்பரம் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06001) ஜனவரி 1ஆம் தேதி புதன்கிழமை தாம்பரத்திலிருந்து இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06002) ஜனவரி 13ஆம் தேதி (வியாழக்கிழமை) திருநெல்வேலியில் இருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்படும். சென்னை எழும்பூர் நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06005) சென்னையிலிருந்து ஜனவரி 13ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் – சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06006) நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி மாலை 03.10 மணிக்குப் புறப்படும். நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06004) ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் தாம்பரம் நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 17ஆம் தேதி திங்கட்கிழமை தாம்பரத்திலிருந்து மாலை 3.45 மணிக்குப் புறப்படும். திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06040) திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு இயக்கப்படும். மறுமார்க்கத்தில் தாம்பரம் திருநெல்வேலி சிறப்பு ரயில் (வண்டி எண் 06039) ஜனவரி 17ஆம் தேதி காலை 10.45 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்படும்.

;