தென்காசி, செப். 29 தென்காசி மாவட்டம், தென்காசியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலை யத்தில் வியாழனன்று, தீபாவளி – 2022 சிறப்புதள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். குற்றாலம் ஸ்ரீ பராசக்தி பெண்கள் கல்லூரி முதல்வர் முனைவர்.சு.ஜெய்நிலா சுந்தரி முதல் விற்பனையை பெற்று கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரி வித்ததாவது: தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெச வாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலை யங்கள்மூலமாக விற்பனை செய்துநெச வாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவிபுரிந்து வருகிறது. காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்தி களைக் கையாண்டு பல புதிய வடிவ மைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு கின்றன. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள்பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30சதவீத சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. கடந்த தீபாவளி 2021ஆம் ஆண்டு பண்டிகை காலத்தில், தென்காசிவிற்பனை நிலையத்தில் ரூ. 40.65 லட்சம் விற்பனை செய்யப்பட்டது.தற்போது தீபாவளி 2022ம் ஆண்டிற்கு ரூ.60 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் “கனவு நனவு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கை யாளர்களிடமிருந்து பெறப்பட்டு 11வது மற்றும் 12வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது. எனவே பொதுமக்கள் இவ் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.