சென்னை, பிப். 7 - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 45ஆவது சென்னை புத்தக்காட்சி பிப்.16 முதல் மார்ச் 6 வரை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் நடைபெறுகிறது. இதனை யொட்டி மாணவர்களுக்கான பன்னாட்டு அளவிலான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் பங்குபெற விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 9884041948 (பெ.மயிலவேலன்) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன்படி பதிவு செய்யாத வர்கள் புத்தகக் காட்சி அரங்கில் நேரில் சென்றும் பதிவு செய்து கொள்ளலாம். பன்னாட்டு பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், புத்தகங்களே பெரிய ஆயுதங்கள், வாசிப்பதால் நான் மனிதன், தமிழ் இலக்கி யங்கள் கூறும் பண்பாட்டு மானிடவி யல் இவற்றில் ஏதாவது ஒரு தலைப்பில் 2 நிமிடம் பேசிய வீடியோவை https://forms.gle/A2mevgUwzfRDEwSy7 என்ற இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 6-8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நான் விரும்பும் நூல் என்ற தலைப்பிலும், 9-12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நூல்களால் உயர்வோம் என்ற தலைப் பிலும் பேச வேண்டும். 1-12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 3 பிரிவுகளாக ஓவியப் போட்டி நடைபெறும். இந்தப் போட்டிகள் பிப்.19ந் தேதியன்று கண்காட்சி வளாகத்தில் நடைபெறும். 1-12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பிப்.20ந் தேதி நடத்தப் படும். 1-8ஆம் வகுப்பு மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்து வாட்ஸ்ஆப் மூலம் அனுப்ப வேண்டும். இதில், இறுதி சுற்றில் பங்குபெறும் மாணவர்கள் மட்டுமே புத்தக்காட்சியில் நேரடியாக பங்கேற்க லாம். போட்டியில் வெற்றி பெறுபவர்க ளுக்கு நீதியரசன் ஆர்.மகாதேவன் பரிசு களை வழங்குவார் என்று பபாசி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.