tamilnadu

img

மணமேல்குடியில் ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி

மணமேல்குடியில்  ஆசிரியர்களுக்கு  திறன் பயிற்சி 

அறந்தாங்கி, ஜூலை 28-  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, மணமேல்குடி வட்டார வள மையத்தில், திறன் பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) சிவயோகம் முன்னிலை வகித்தார்.  இப்பயிற்சியில் திறன் குறித்த அறிமுகம், மாணவர்களிடையே காணப்படும் கற்றல் இடைவெளிகளை குறைப்பதை இலக்காக கொண்டு குறுகிய கால கல்வி திட்டம் தயாரிப்பு குறித்தும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறன்களில் மாணவர்களை மேம்படுத்துதல் தொடர்பான பயிற்சி நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுனர் சசிகுமார் மற்றும் ஆசிரியர் சுதாகர் ஆகியோர் கருத்தாளராக செயல்பட்டனர்.