சென்னை, ஜூன் 13- தமிழகத்தின் வளர்ச்சித் திட்டம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் மூன்று நாட்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டா லின் மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக் கப்பட்டது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திரு வண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், திருவாரூர் ஆகிய 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஜூன் 13 அன்று கள்ளக்குறிச்சி, அரிய லூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் சென்னை, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, “மாவட்டங்களில் திட்டப்பணிகளை நல்ல தரத்துடன் விரைவாக முடிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் நட மாட்டத்தை முற்றிலும் ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.