31 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்த சாஸ்திரா பல்கலை. ஏழைக்கொரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறொரு நீதியா?
சென்னை, ஜன.17- சாஸ்திரா பல்கலைக்கழ கம் அபகரித்து வைத்துள்ள 31 ஏக்கர் அரசு நிலத்தை மீட்பதற்கு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பெ. சண் முகம் கோரிக்கை விடுத் துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தமது சமூகவலைதள பக் கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழக வளாகத்திற்குள், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான 31.37 ஏக்கர் நிலத்தை ஆக்கி ரமித்து மாணவர் விடுதி யைக் கட்டி, கடந்த 35 ஆண்டு களுக்கும் மேலாகக் கோடிக் கணக்கான ரூபாய்களைக் கட்டணம் என்ற பெயரில் வசூலித்து லாபமடைந்துள் ளது பல்கலைக்கழக நிர்வா கம். இந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை நடத்தி யது. கீழமை நீதிமன்றமும் ஆக்கிரமிக்கப்பட்ட நில த்தை மீட்க உத்தரவிட்டது. இதற்கு எதிராக சாஸ்திரா நிர்வாகம் உயர் நீதிமன் றத்திற்குச் சென்றார்கள். சென்னை உயர் நீதிமன்ற மும் நிலத்தை மீட்குமாறு கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி உத்தரவிட்டதால், அடுத்ததாக அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றார்கள். அதில், உயர் நீதிமன்ற உத்த ரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று தடை விதித்து விட்டது. வேறு இடமே இல்லாமல் தனது குடும்பம் வாழ 3 செண்ட் இடத்தில் குடிசை அமைத்தால், ஆகப்பெரிய குற்றம் என்று கூறி உடனே அப்புறப்படுத்த உத்தர விடும் நீதிமன்றங்கள், பல நூறு ஏக்கரில் பல்கலைக்கழ கம் நடத்துபவர் ஆக்கிர மித்துள்ள 31 ஏக்கர் அரசு நில த்தை மீட்கக் கூடாது என்று தடை விதித்துள்ளது. ஏழைக்கொரு நீதி, வசதி படைத்த கல்வி வியாபாரி களுக்கு வேறொரு நீதியா? தமிழ்நாடு அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடி யாக எடுக்க வேண்டும். இவ்வாறு பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
