tamilnadu

img

சேமிப்புத் திட்ட மோசடி

சேமிப்புத் திட்ட மோசடி

ஈரோடு, ஜூன் 30 – ஈரோட்டில் “சேமிப்புத் திட்டம்” என்ற பெயரில் மாதந்தோறும் பணம் வசூலித்து மோசடி செய்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள னர். “மதர்ஸ் அக்ரோ பார்ம் இந்தியா லிமிடெட், தஞ்சா வூர்” என்ற பெயரில் சத்தியமங்கலத்தில் இயங்கி வந்த  ஒரு நிறுவனம், கடந்த 2012 முதல் மக்களை ஏமாற்றி வந்துள்ளது. மாதம் ரூ. 1,000 செலுத்தினால், 72 மாத  முடிவில் ரூ. 1.22 லட்சம் வழங்கப்படும் என கவர்ச்சிக ரமான வாக்குறுதிகளை அளித்துள்ளனர். கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த சிவசங்கரி என்பவர் இந்தத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ. 1,000  செலுத்தி வந்துள்ளார். 72 மாதங்கள் நிறைவடைந்த பிறகு, அவருக்கு முதிர்வு தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு இதுவரை எந்தப் பண மும் கிடைக்கவில்லை. பணம் செலுத்தியதற்கான ரசீதுகள் மற்றும் அடை யாள அட்டையைத் திருப்பிக் கொடுத்தால் சில மாதங் களில் பணம் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் கூறி யுள்ளது. இல்லை என்றால், உக்கரம் கிராமத்தில் உள்ள மனைப் பிரிவுகளில் ஒன்றை கிரையம் செய்து தரு வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். வீட்டு மனை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிவசங்கரி காத் திருந்த நிலையில், நிறுவனத்தினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிவ சங்கரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்துள்ளார். சிவ சங்கரியைப் போலவே அப்பகுதியில் ஏமாற்றப்பட்ட பல ரும் அவருடன் சேர்ந்து மனு அளித்தனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.  சுப்ரமணியன் உடனிருந்தார்.