தென்னிந்திய ரோல்பால் போட்டியில் சாய் ஜி மாணவர்கள் சாதனை
திருச்சிராப்பள்ளி, செப். 24- திருச்சிராப்பள்ளி சாய் ஜி ரோல்பால் மாணவர்கள், 6 ஆவது தென் இந்திய ஜூனியர், சீனியர் ரோல்பால் போட்டியில் வெற்றி பெற்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 6 ஆவது தென்னிந்திய ஜூனியர், சீனியர் ரோல்பால் போட்டி கடந்த 13, 14 ஆம் தேதிகளில் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் எம்.பி.சுப்ரமணியம் தலைமையில் கேரளாவில் நடைபெற்றது. இப்போட்டியில், தமிழக அணியினர் சிறப்பான வெற்றியைப் பெற்றனர். இதில் திருச்சிராப்பள்ளி சாய் ஜி ரோல்பால் மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை வென்றனர். இதையொட்டி, மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் பாராட்டு விழா திருச்சி கே.கே.நகரில் உள்ள சாய்ஜி ரோல்பால் அகடாமியில் நடைபெற்றது. விழாவில் வீரர், வீராங்கனைகளை கே.டி. சிவசண்முகம், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் சங்க மாநிலச் செயலாளர் சி. கோவிந்தராஜ், மாநில துணைத் தலைவர் சரவணன், மாநில துணைச் செயலாளர் சி.மணிகண்டன், புதுக்கோட்டை ரோல் பால் சங்க தலைவர் ஜெயக்குமார் ஆகி யோர் பாராட்டினர். விழாவில் சாய் ஜி அகடாமி பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.