tamilnadu

img

வர்க்க அரசியலை கலை நயத்தோடு பதிவு செய்துள்ளார் பா.செயப்பிரகாசம்

சென்னை, செப். 24 - வர்க்க அரசியலை கலை நயத்தோடு பா.செயப்பிரகாசம்  பதிவு செய்துள்ளார் என்று எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கூறினார். மறைந்த எழுத்தாளர் பா.செயப்பிரகா சம் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘உச்சி வெயில்’ நாவல் வெளியீடு மற்றும் மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் பி.வி.பக்தவச்சலத்தின் 16ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் சனிக் கிழமையன்று (செப்.23) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை பி.வி.பக்தவச்சலம்  அறக்கட்டளையும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழுக்களும் இணைந்து  நடத்தின. நாவலை எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன் வெளியிட, எழுத்தாளர் க.பஞ் சாங்கம் பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய ச.தமிழ்ச்செல்வன், “தமிழ் நவீன இலக்கியத்தின் நுட்பமான படைப்பாளி பா. செயப்பிரகாசம். சிறுகதைகளில் உச்சத்தை தொட்டவர். தடம் புரளாத வாழ்க்கையை வாழ்ந்தவர்”  என்றார். “இந்த நாவல், தற்போதுள்ள  கல்வி முறை குறித்து கேள்வி எழுப்புகிறது; விமர்சிக்கிறது. கிராமங்களில், கல்வி நிலையங்களில் சாதிவெறி எப்படி  ஆட்சி செய்கிறது என்பதை வர்க்க அரசிய லோடு பேசுகிறது. கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கும் கல்வி முறைக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதை நுட்பமாக பதிவு செய்கிறது. வர்க்க அரசியலை கலை நயத்தோடு செயப்பிரகாசம் பதிவு செய்துள்ளார்” என்றார். இந்நிகழ்விற்கு தமுஎகச துணைத் தலைவர் மயிலை பாலு தலைமை தாங்கி னார். பத்திரிகையாளர் ஆர்.மணி, பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளை நிர்வாகி கள் டாக்டர் பி.வி.வெங்கட்ராமன்,  வழக்கறிஞர் அஜிதா, தமுஎகச மாவட்டச்  செயலாளர்கள் க.மலர்விழி (தென் சென்னை), மணிநாத் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;