திருப்பூர், டிச. 22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளராக செ.முத்துக்கண்ணன் தேர்வு செய்யப்பட்டார். திருப்பூர் பல்லடம் சாலை கே.தங்கவேல் நினைவரங்கில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 23ஆவது மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வு நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி வாழ்த்திப் பேசினார். உடுமலைபேட்டை மலை வாழ் மக்களுக்கு 10 ஆண்டு களாக வன உரிமை வழங்கா மல் காலதாமதம் செய்வதை கண்டித்தும், உடனடியாக அந்த மக்களுக்கு நிலப்பட்டா வும், சமூக உரிமையும் வழங்கக் கோரியும், நிலமற்ற விவசாயத் தொழிலாளர் களுக்கு நிலமும், வீட்டு மனைப் பட்டாவும் வழங்க வலியுறுத்தியும், ஆனை மலையாறு - நல்லாறு அணைத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி யும், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் மார்க்கத்தில் செல்லும் பயணிகள் (பாசஞ்சர்) ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்,
பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். உயர்மின் கோபுரத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு நல உதவி கள் உயர்த்திடவேண்டும். கைத்தறி நெசவுத்தொழிலை யும், தொழிலாளர்களையும் பாதுகாக்கக் கோரியும், திருப்பூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்கவேண் டும், உடுமலை அரசு மருத்து வமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், அமரா வதி சர்க்கரை ஆலையை இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக ஞாயிறன்று மக்கள் நலத் திட்டங்கள் விளக்கக் கையேடு நூலை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வெளியிட, பின்னல் புத்தக நிலையப் பொறுப்பாளர் பா.சௌந்தரபாண்டியன் பெற்றுக்கொண்டார். இம்மாநாட்டில் மொத்தம் 41 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வுசெய்யப்பட்டது. மாவட்டக் குழுச் செயலாள ராக செ.முத்துக்கண்ணன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்களாக கே.காமராஜ், கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், எஸ்.ஆர். மதுசூதனன், சி.மூர்த்தி, ஜி.சாவித்திரி, ஆர்.குமார், கே.ரங்கராஜ், எஸ்.சுப்பிர மணியன், டி.ஜெயபால், ச.நந்தகோபால், செ.மணி கண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் மாநாட்டை நிறைவுரையாற்றினார். வர வேற்புக்குழுச் செயலாளர் சி.மூர்த்தி நன்றி கூறினார்.