துறையூர் நகரப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஜூலை 20 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்க துறையூர் கிளையின் 5 ஆவது வட்ட மாநாடு சனிக்கிழமை திருச்சி மாவட்டம் துறையூரில் நடந்தது. மாநாட்டிற்கு கிளை தலைவர் சித்தார்த் தன் தலைமை வகித்தார். வட்ட துணைத் தலைவர் வீரமலை வரவேற்றார். திருச்சி மாவட்டத் தலைவர் சிராஜுதீன் துவக்க உரை யாற்றினார். வேலை அறிக்கையை கிளைச் செயலாளர் ராஜப்பா வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை வட்டப் பொருளாளர் சந்திரசேகரன் சமர்ப்பித்தார். அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் மணிமாறன், வட்ட இணைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் துறையூர் நகராட்சிப் பகுதி களில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத் தும் வகையில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். துறை யூரில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைகளில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கேஷ் கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டத்தின் புதிய தலைவராக பி.வீரமலை, செயலாளராக எஸ்.ராஜப்பா, பொருளாளராக பி. சந்திரசேகரன் உள்பட 7 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. மாநிலச் செயலாளர் எம்.வி. செந்தமிழ்செல்வன் நிறைவுரையாற்றினார். வட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறி னார்.