tamilnadu

அமித் ஷா-வின் வெறுப்பைப் பிரதிபலிக்கும் தில்லி காவல்துறை வங்காள மொழி பேசும் மக்களை ஊடுருவல்காரர்களாக சித்தரிக்க முயற்சி!

அமித் ஷா-வின் வெறுப்பைப் பிரதிபலிக்கும் தில்லி காவல்துறை வங்காள மொழி பேசும் மக்களை ஊடுருவல்காரர்களாக சித்தரிக்க முயற்சி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

புதுதில்லி, ஆக. 4 - ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டி லுள்ள தில்லி காவல்துறையானது, வங்காள மொழியை, ‘வங்கதேசத்தின் மொழி’ என அடையாளப்படுத்தி இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்  தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை யில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வங்காள மொழியை ‘பங்களாதேஷ் மொழி’ என்று தவறாகக் குறிப்பிட்டு தில்லி  காவல்துறை வெளியிட்ட கடிதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்  தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக் கிறது.  ‘சட்டவிரோத வங்காளதேச குடியேறிகள்’ என்ற சந்தேகத்தின் பேரில்,  வங்காள மொழி பேசும் நபர்கள் ஏராள மானோரை, ஏற்கெனவே, கைது செய்து  வரும் நிலையில், இது தில்லி காவல்துறை யினரிடம் உள்ள துன்புறுத்தும் அணுகு முறையையே பிரதிபலிக்கிறது.  ஏனெனில், வங்காள மொழி பேசும் நபர்களை எல்லாம் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் சந்தேகத்தின்பேரில் தில்லி போலீசார்  கைது செய்து வருகின்றனர். வங்காள மொழி என்பது ஒன்றே ஒன்றுதான் என்பதும், அதற்கு தனித்துவமான எழுத்து வடிவம் உள்ளது என்கிற உண்மையையும் அவர்கள் அறியாதிருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. வங்காள மொழி, இந்திய அரசிய லமைப்பின் 8-ஆவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகளில் ஒன்றாகும். அதனை, ‘ஓர் அந்நிய நாட்டு மொழி’ என்று முத்திரை குத்துவதன் மூலம்,  ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ்  நேரடியாக இயங்கிவரும் தில்லிக் காவல்துறை, அரசியலமைப்பு சட்ட விதி முறைகளை அப்பட்டமான முறையில் மீறிச்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வங்காள மொழி பேசுபவர்களுக்கு எதிராக அமித் ஷா  திரும்பத் திரும்ப வெறுப்பைக் காட்டி வரு வதைத் தான், அவருடைய அதிகாரத்தின்