பெரும் மழை வெள்ளம் 3 மாநிலங்களுக்கு தொடரும் சிவப்பு எச்சரிக்கை
வட மாநிலங்களில் தொடரும் பெரும் மழை வெள்ளத்தின் காரணமாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல் ஆகிய 3 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை தொடர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக வட மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. அளவுக்கு அதிகமாக கொட்டி வரும் கனமழையால் ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், பஞ்சாப், இமாச்சல் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடுமை யான பாதிப்பை சந்தித்துள்ளன. வெள்ளத்தின் காரணமாக பல மாநிலங்க ளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு முடங்கிப் போயுள்ளது. விவசாய நிலங்களில் தண்ணீர் நிரம்பி கடுமையான சேதம் ஏற் பட்டுள்ளது. மூன்று மாநிலங்களிலும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினரும், ராணுவத்தின ரும் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், லடாக், ஹரியானா, ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, உத்தரப் பிரதே சத்தின் தென்மேற்கு பகுதிகள், மத்தியப் பிரதே சம் மற்றும் ஒடிசாவில் தொடர்ந்து கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜார்க்கண்டில் வழக்கத்திற்கு மாறாக கனமழை ஜார்க்கண்ட் மாநிலத்தின், மூன்று மாவட் டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 2025 ஜூன் 1 முதல் செப்.1 வரை ஜார்க்கண்டில் வழக்கத்தை விட 26 சதவிகிதம் அதிகமாக சுமார் 1034.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பஞ்சாப் வெள்ளம் பலி உயர்வு பஞ்சாப் மாநிலத்தில் தொடரும் கனமழை யால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 30 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை பேரிடர் பாதிப்பாக அம்மாநில அரசு அறிவித் துள்ளது. மேலும் மாநிலத்தின் 23 மாவட்டங்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பஞ்சாப் மாநிலம் முழுவ தும் சுமார் 1,400 கிராமங்களைச் சேர்ந்த 3.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக் கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 19,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிட்டத் தட்ட 3.75 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக் கான கால்நடைகள் இந்த வெள்ளத்தில் சிக்கி யுள்ளன. குறிப்பாக அறுவடைக்குத் தயாரான பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, பஞ்சாப் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.