வேலூர்,டிச.20 வேலூர் நகைக் கடையின் சுவரைத் துளையிட்டு திருடப்பட்ட நகைகளை தனிப்படை காவல்துறையினர் மீட்டுள்ள னர். வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் சுவரில் துளைபோட்டு மர்மநபர்கள் நகைகளை திருடிச் சென்றனர். 15 கிலோ தங்கநகைகள், அரை கிலோ வைர நகைகள் திருட்டு போனது. கொள்ளையர்களை பிடிக்க 4 டி.எஸ்.பி. தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒருவர் சிக்கினார். இந்த நிலையில் பள்ளிகொண்டாவை அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்த டீக்காரா மன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நகைகளை பிரித்து ஆங்காங்கே பதுக்கி வைத்தி ருந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, நகைகள் பதுக்கி வைத்த இடத்தை அடை யாளம் காட்டும்படி அவரை அழைத்து சென்றனர். குச்சிபாளையத்தில் உத்தரகாவேரி ஆற்றங்கரையோரம் சுடுகாட்டில் நகை களை புதைத்துள்ளார். அந்த இடத்தில் காவல்துறையினர் தோண்டிபார்த்தபோது அங்கு நகைகள் இருந்தது. 15 கிலோ நகை கள் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.