ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு
கோபி, ஜூலை 4- கோபி அருகே பல ஆண்டுகளாக ஆக்கிர மிப்பில் இருந்த ஒன்றை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்துறையினர் அகற்றினர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பெரியார்நகரில் (கல்லாங் குத்து வகைபாடு) அரசு புறம்போக்கு நிலத்தை பல ஆண்டு களாக முத்துச்சாமி, பழனிசாமி, சதாசி வம், மைதிலி, தங்கமுத்து, குணசேகர் ஆகிய 7 பேர் ஆக்கிரமிப்பு செய்திருந் தனர். இந்நிலத்தில், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை விவ சாயம் செய்து வந்தனர். அரசு புறம் போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும் என வரு வாய்த்துறைக்கு தொடர்ந்து பல தரப்பி னரும் புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வருவாய்துறையினர் அப்பகுதியில் உள்ள அரசின் 4.5 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்ததில் 1.5 ஏக்கர் அரசின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாய பயிர் செய்திருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த 7 பேருக்கும் 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என வருவாய்துறையினர் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். நோட்டீஸ் வழங்கப்பட்டு 15 நாட்கள் ஆன நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் வெள்ளியன்று வருவாய்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆகிரமிப்புகளை அகற்றினர். அப்போது 30 ஆண்டுகளுக்கு மேலாக (கல்லாங்குத்து வகைபாடு) அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கரும்பு வாழை பயிர் செய்து வந்ததை அகற்றினர். மேலும் ஆக்கிரமிப்புப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் இருந்ததால் தென்னை மரங்களை வெட்டாமால் பொலவக்காளிபாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைத்து பராமரிக்க அனுமதி அளித்துள்ளனர்.