மாநிலங்களவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் 4 பேர் வேட்புமனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் திருச்சி சிவா, கான்ஸ்டாண்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
சென்னை, மார்ச் 5 - மாநிலங்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்கள், வியாழக்கிழ மையன்று தங்களின் வேட்புமனுக் களைத் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 6 மாநி லங்களவை இடங்களுக்கு மார்ச் 16 அன்று தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 26 முதல் துவங்கி நடைபெற்று வந்தது. தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கை அடிப்படை யில் திமுக சார்பில் நான்கு எம்.பி.க் களையும், அதிமுக சார்பில் இரண்டு எம்.பி.க்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். அந்த வகையில், திருச்சி என். சிவா, கான்ஸ்டாண்டைன் ரவீந்திரன் ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்த திமுக, கூட்டணியிலுள்ள காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சி களுக்கு தலா ஒரு இடத்தை விட்டுக் கொடுத்தது. இதில், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக்-கும், தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷூம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த நான்கு வேட்பாளர்களும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வியாழக்கிழமை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தங்களின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சி யில், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மதிமுக எம்.பி.துரை வைகோ, தேமுதிக பொதுச் செயாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக கூட்டணியில் மு. தம்பி துரை, அன்புமணி ஆகியோரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
