வாக்கு திருட்டு குற்றச்சாட்டு ராகுல் காந்தியின் ஆதாரங்கள் உண்மையே!
ஆய்வின் மூலம் அம்பலப்படுத்திய ஊடகங்கள்
“நான் 36 ஆண்டுகளாக வசிக்கிறேன் ; 80 வாக் காளர்களை நான் பார்த்ததே இல்லை” - போட்டு டைத்த அண்டை வீட்டு குடி யிருப்பாளர். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவ ருமான ராகுல் காந்தி வியாழ னன்று (ஆக. 7) நாட்டில் வாக்கா ளர் திருட்டு மூலம் பாஜக ஆட்சி யை கைப்பற்றி வருவதாக குற்றம் சாட்டியது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கூறிய குற்றச்சாட்டில் மிக முக்கிய மானதாக இருப்பது, கர்நாடக மாநி லத்தின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 6.5 லட்சம் வாக்கு களில், 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்ட வாக்கு களாக இருந்ததாகவும், மகாதேவ புராவில் பூத் எண் 470இல் உள்ள முனி ரத்னா லே அவுட்டில் உள்ள ஒரே வீட்டில் சுமார் 80 வாக்கா ளர்கள் போலியாகப் பதிவு செய் யப்பட்டுள்ளது ஆகிய இரண்டும் தான். அறை எண் 35 என குறிப் பிட்டுள்ள 10-15 சதுர அடி மட்டுமே கொண்ட அந்த வீட்டில் 80 வாக்காளர்கள் எப்படி பதிவு செய்யப்பட்டு இருப்பது எப்படி? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி னார். இந்நிலையில், ராகுல் காந்தி குற்றச்சாட்டை தொடர்ந்து 80 வாக்காளர்கள் குடியிருந்ததாக கூறப்படும் சிறிய வீட்டில் ஆங்கில ஊடகங்களான “தி நியூஸ் மினிட்” மற்றும் “இந்தியா டுடே” செய்தியா ளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்தியா டுடே ராகுல் காந்தி குற்றம் சாட்டிய பகுதி சுமார் 35 சிறிய அறைகளைக் கொண்ட (மேன்சன் அறைகளை போன்று) ஒரு நெரிசலான குடி யிருப்பு பகுதியாகும். ஒவ்வொரு அறையும் வெறும் 10 முதல் 15 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒரு வீட்டில் பொதுவாக 3 பேருக்கு மேல் அங்கு தங்க முடியாது. ராகு லின் குற்றச்சாட்டு 35ஆவது வீடு ஆகும். இந்தியா டுடே ஆய்வில் அந்த வீட்டில் வசித்து வரும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் தீபங்கர் கூறு கையில்,”நான் சமீபத்தில் தான் இந்த வீட்டில் குடியேறினேன். எனக்கே பெங்களூரில் வாக்கா ளராகப் பதிவு செய்யவில்லை. அப்படி இருக்கையில் இவர்கள் யார்? இந்த முகவரியில் இருக்கும் பெயர்கள் (80 வாக்காளர்கள்) யாரும் தனக்குத் தெரியாது. இந்த வீடு பாஜக பிரமுகர் ஜெயராம் ரெட்டி என்பவருக்குச் சொந்தமா னது” எனக் கூறியுள்ளார். பாஜக பிரமுகர் மழுப்பல் இதனை தொடர்ந்து பாஜக பிரமுகர் ஜெயராம் ரெட்டியை இந்தியா டுடே செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு பேசினார்கள். இதற்கு பதில் அளித்த ஜெயராம் ரெட்டி, நான் பாஜக பிரமுகர் என ஒப்புக்கொண்டார். பின்னர் இல்லை என மழுப்பியுள்ளார். ஆனாலும் தனது குடியிருப்பின் ஒரே வீட்டில் 80 பேர் வாக்கா ளர்களாக பதிவு செய்து இருப்பது ஆச்சர்யமானது. ஆனால் இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார். தி நியூஸ் மினிட் இதே போல தி நியூஸ் மினிட் செய்தியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் குடியிருப்பின் 35ஆவது வீட்டிற்கு அருகில் உள்ள வீடான 34இல் நீண்டகாலமாக வசித்து வரும் நிதிஷ் மொண்டல் என்ப வர் கூறுகையில்,”நான் இங்கு 35 ஆண்டுகளாக இங்கு தங்கி இருக்கி றேன். வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒருமுறை கூட அவர்களை நான் பார்த்தது இல்லை. ஆனால் 80 பேர் அந்த வீட்டில் தங்கினார்கள் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இங்குள்ள பெரும் பாலான மக்கள் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இருந்து வந்த வர்கள். கர்நாடகாவில் எங்கள் யாருக்கும் வாக்குகள் இல்லை. அப்படி இருக்கையில் எப்படி அவர்கள் கர்நாடக மக்கள் போன்று வாக்களித்தனர் என சந்தேகமாக உள்ளது” என அவர் கூறினார். “தி நியூஸ் மினிட்” மற்றும் “இந் தியா டுடே” ஆய்வு மூலம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு உண்மை என்பது அம்பலமாகியுள்ளது.
பீகாரில் வாக்காளர் பட்டியலில் 3 லட்சம் வீட்டு முகவரி எண் “0”
வாக்கு திரட்டு தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட் டிற்குப் பிறகு நாடு முழுவதும் “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் வாக்களர் பட்டியலை ஆய்வு செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பீகாரில் ராஷ்டிரிய ஜனதாதள (ஆர்ஜேடி) கட்சி மேற்கொண்ட ஆய்வில் வாக்காளர் பட்டியலில் 3 லட்சம் வீட்டு முகவரி எண் “0” என குறிப்பிடப்பட்டுள்ளது என அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி கூறுகையில், ”பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வாக்கா ளர் பட்டியலில் உள்ள 3 லட்சம் வீடுகளுக்கு வீட்டு எண்களே இல்லை. 0 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இது என்ன மாதிரியான திருத்த செயல்முறை?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.