tamilnadu

img

பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக தரமாகக் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தல்

பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக தரமாகக் கட்ட  பொதுமக்கள் வலியுறுத்தல்

பாபநாசம், அக். 7-  அய்யம்பேட்டை அருகே, கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள ஊராட்சியான கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடியை இணைக்கின்ற 40 ஆண்டுகளைக் கடந்த மண்ணியாற்றுப் பாலம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதேேxபோன்று, புத்தூரிலுள்ள மண்ணியாற்றுப் பாலமும் பழுதடைந்துள்ளது. இந்தப் பாலத்தின் வழியே வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பாலம் மட்டும்  இடியுமானால், போக்குவரத்து மு ற்றிலும் துண்டிக்கப் படுவதுடன், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.  எனவே, பாலத்தை நம்பியுள்ள பல நூற்றுக்கணக்கான மக்களின் நலன் கருதி பட்டுக்குடி, புத்தூர் மண்ணியாற்றுப் பாலத்தை இடித்து விட்டு புதிதாக தரமாக பாலம் கட்ட வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு பாலத்தை ஆய்வுச் செய்ய, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.