கோட்டயம், ஆக.16- கேரளத்தில் உள்ள புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாள ராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயிக் சி.தாமஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவைத் தொடர்ந்து புதுப்பள்ளி தொகுதிக்கு செப்டம்பர் 5 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) வேட்பாளராக உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் (38) அறிவிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் சனியன்று எல்டிஎப் வேட் பாளராக கட்சியின் கோட்டயம் மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயிக் சி.தாமஸ் (33) போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக உள்ளார். புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ச்சியாக 53 ஆண்டுகள் வெற்றி பெற்றவர் மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி. இவரை எதிர்த்து 2016, 2021 ஆகிய தேர்தல்களில் ஜெயிக் சி.தாமஸ் போட்டியிட்டார். கடந்த முறை உம்மன் சாண்டி அவரது தேர்தல் வர லாற்றிலேயே குறைவான வாக்கு களை பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. இம்முறையும் ஜெயிக் சி.தாமஸ் வேட்பாளராக அறிவிக்கப் பட்டது எல்டிஎப் ஊழியர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடதுசாரி இயக்கத்தின் பிரச்சாரமும் மக்கள் சந்திப்பும் உற்சாகத்துடன் நடைபெற்று வரு கின்றன. தொகுதியின் முக்கிய பிரமுகர் களைச் சந்தித்து ஜெயிக் சி.தாமஸ் ஆதரவு கோரி வருகிறார். அப்போது அவர்களில் சிலர், கடந்த முறை உங்களுக்கு வாக்களிக்க முடியவில்லை. இம்முறை நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என வாழ்த்தினர்.
வாக்கு விவரம்:
2016 தேர்தலில் உம்மன்சாண்டி 71,597 (53.41%) வாக்குகள் பெற்றார். 2021 தேர்தலில் 63,372 (48.08%) ஆக வீழ்ச்சி அடைந்தது. 2016 இல் ஜெயிக் சி.தாமஸ் 44,505 வாக்குகள் பெற்றார். 2021 இல் 54.328 (41.22 %) ஆக அதிகரித்தது. 2016இல் பாஜகவின் ஜார்ஜ் குரியன் 15,993 (11.93 %) வாக்குகளும் 2021இல் பாஜகவின் ஹரி 11,694 (8.87%) வாக்குகளும் பெற்றனர்.
பாஜக வேட்பாளர் ஜி.லிஜின் லால்
பாஜக வேட்பாளராக ஜி.லிஜின் லால் அறிவிக்கப்பட்டுள்ளார். யுவமோர்ச்சா முன்னாள் மாநில செயலாளரான இவர் தற்போது பாஜகவின் கொல்லம் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் 2021 தேர்தலில் கடுத்துருத்தி தொகுதி யில் போட்டியிட்டு 8.88 (11,670) சத விகிதம் வாக்குகளைப் பெற்றார்.