tamilnadu

img

சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

நாமக்கல், ஆக.11- பள்ளிபாளையம் அருகே குண்டும், குழியுமாக காணப்ப டும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலி யுறுத்தி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த கருப்பணா நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர். இக்குடியிருப்பு பகுதிக்கு செல்லும் இணைப்பு  சாலை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் மழை காரணமாக குண்டும், குழியுமாக மாறியது. இதனால் ஆம்புலன்ஸ், பள்ளி  வாகனங்கள் கூட வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. பெரும் இன்னல்களை சந்தித்த பொதுமக்கள் இது குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட் டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனி டையே, இச்சாலையில் பயணித்த இருவர் கீழே விழுந்ததில் கை எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ஞாயிறன்று அக்ரஹாரம் சாலையில் அமர்ந்து  மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்  துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது போலீசாருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.