ஊராட்சி சாலையை பயன்படுத்த தடை விதித்த தனிநபர்: பொதுமக்கள் மறியல்
நாமக்கல், அக்.28- வெண்ணந்தூர் ஒன்றியத் திற்குட்பட்ட மின்னக்கல் ஊராட்சி சாலையை பயன்ப டுத்த தடை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தை அடுத்த வெண்ணந் தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோடிக்காடு, ஆண்டிக் காடு, மதுக்கான்காடு, மின்னக்கல் அக்ராஹா ரம் பகுதிகளில் 1500க்கும் மேற்ப்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் மின்னக்கல் ஊராட்சி சாலை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், திடீரென தனிநபர் ஒருவர், தன் னுடைய பட்டா நிலத்தில் சாலை உள்ளதாகக் கூறி, சாலையை வெட்டி மக்கள் பயன் பாட்டை தடுத்ததால், அப்பகுதி மக்கள் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சி யரிடமும், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடமும் புகாரளித்த நிலையில், எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசடைந்த அப்பகுதி பொதுமக்கள் செவ்வாயன்று ராசிபுரம் - ஆட்டையாம்பட்டியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜய குமார், வெண்ணந்தூர் காவல் ஆய்வாளர் சுக வனம் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, சம்மந்தப் பட்ட அதிகாரிகளை அழைத்து, பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக காவல் துறையினர் வாக்குறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்ட னர்.
